fbpx
Others

தமிழ்நாடு அரசு –புதிய சாதனைகொடிநாள் நிதியாக ரூ.58 கோடி திரட்டியது.

சென்னை: ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 07ஆம் நாள் நாடு முழுவதும் கொடி நாளாகஅனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் போர் மற்றும் போரையொத்த நடவடிக்கையில் நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த முப்படையினை சேர்ந்த வீரர்கள், ஊனமுற்ற வீரர்கள், முன்னாள் படைவீரர்களின் தியாகங்களை நினைவுகூறவும், அவர்களுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களுக்காக கொடிநாள் நிதி திரட்டப்பட்டு வருகிறது.ஒவ்வோர் ஆண்டும் கொடிநாள் நிதி திரட்டப்பட்டதில் தமிழ்நாடு அகில இந்திய அளவில் தொடர்ந்து முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ரூ.53 கோடி நிதி திரட்டப்பட்டது. இவ்வாண்டு, இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.58 கோடி கொடிநாள் நிதியாக திரட்டப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடுமுதலமைச்சர்இன்று(07.12.2023)காலையில்கொடிநாள்2023 க்கானநன்கொடையினை, சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்து, கொடிநாள் மலர் வெளியிட்டு, கொடிநாள் நிதி அதிக அளவில் வாரி வழங்கிட தமிழ்நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டார். தமிழ்நாடு ஆளுநரும் ,சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று காலை கொடிநாள் நன்கொடை வழங்கி, அதிக அளவில் கொடிநாள் நிதி வழங்கிட தமிழ்நாட்டு மக்களை கேட்டுக்கொண்டார்…

Related Articles

Back to top button
Close
Close