fbpx
Others

தமிழ்நாடுஅரசின் சறுக்கல்கள்…..பொதுமக்கள்ஆதங்கம்…?

தமிழ்நாடு அரசின் சறுக்கல்கள் (.1 ) பால் மூலம் உற்பத்தி ஆகும் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. சொத்துவரி, குடிநீர் வரி கடுமையாக உயர்த்தப்பட்டது.வரி உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவதில்லை என்ற தவறான வாதத்தை அரசு முன்வைக்கிறது. பெரும்பாலான ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாடகை வீட்டில் குடியிருக்கின்றனர். இந்த வரி உயர்வை காரணம் காட்டி, வீட்டு உரிமையாளர்கள் வீட்டின் வாடகையை கணிசமாக உயர்த்துகின்றனர் (. 2 ) மாதமொருமுறை மின்சார கட்டணம் எடுப்போம் என கூறி ஆட்சிக்கு வந்து, இதுவரை அதை நடைமுறை படுத்தாமல், தற்போது மின்சார கட்டணத்தையும் கடுமையாக உயர்த்தி உள்ளது ( 3.)ஆம்னி பேருந்துகள் வசூலிக்கும் கட்டண கொள்ளையை தடுக்க முன்வரவில்லை (.4 ) ஓலா, யூபெர் போன்ற நிறுவனங்களில் வாடகை டாக்ஸி ஓட்டுபவர்களுக்கு உரிய தொகை அளிக்கப்படுவதில்லை. இதற்கு மாற்றாக, தமிழ்நாடு அரசு சார்பில் இதற்கான பிரத்யேக APP உருவாக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், அதற்கான எந்த அறிவிப்பும் அரசு வெளியிடவில்லை ( 5. ) மக்களின் குறைகளை பதிவு செய்யும் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற செயலியில் எந்த குறைகளும் நிவர்த்தி செய்யப்படுவதில்லை (  6 ) .கிராமசபை தீர்மானங்கள் இன்றும் செல்லாக்காசாகவே உள்ளன  (7).CBSE தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டணக்கொள்ளையை தடுக்க எந்த சட்டமும் இல்லை(. 8  )நீட் விலக்கு பெறுவோம் என ஆட்சிக்கு வந்து, அதற்கான எந்த முன்னெடுப்பும் இல்லாமல் உள்ளது.கவர்ச்சியாக சில திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று, மக்கள் பாதிக்கும் இதுபோன்ற விலையேற்றத்தை பற்றி யாரும் சிந்திக்காமல் பார்த்து கொள்கிறீர்கள்.

அனைத்து பிரச்சினைகளுக்கும் போராட வேண்டும். தற்போது மின்சார கட்டண உயர்வை கண்டித்து, காவல்துறை அனுமதியுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கிறோம். அனைவரும் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்வோம்.

இடம்: வள்ளுவர் கோட்டம் அருகில்.
நாள்: அக்டோபர் 9ஆம் தேதி, ஞாயிறு மாலை 3.30 மணிக்கு

Related Articles

Back to top button
Close
Close