fbpx
Others

தமிழை அழிக்கிறார் ஆளுநர்தமிழிசை – நாராயணசாமி ஆவேசம்

தமிழிசை என்ற பெயர் வைத்துக்கொண்டு புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ பாடதிட்டத்தை புகுத்தி தமிழ் மொழியை அழிக்கும் வேலையை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்வதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், நாட்டின் சொத்துக்களை பிரதமர் மோடி அடிமாட்டு விலைக்கு விற்று வருகின்றார்.சென்னை, பெங்களூர், திருச்சி உள்ளிட்ட 27 விமான நிலையங்களை தனியார் மயமாக்கப்பட்ட உள்ளது. மோடி அரசின் கஜானா காலியாவதால் பொது சொத்துக்களை விற்று ஆட்சி நடத்துவதாக குற்றஞ்சாட்டினார்.மேலும், புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளை சி.பி.எஸ்.இ பாடதிட்டத்தின் கீழ்கொண்டு வருவதற்காக புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது அரசின்கொள்கை முடிவா என கேள்வி எழுப்பிய அவர், சி.பி.எஸ்.இ வந்தால் தமிழ் பாடம்இருக்காது. ஆனால் தமிழ் மொழியுடன் கூடிய சி.பி.எஸ்.இ பாடதிட்டத்தைஅமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தான் அறிவிக்க இயலுமா என்று கேள்வியெழுப்பிய நாராயணசாமி, தமிழிசை என பெயர் வைத்துக்கொண்டு தமிழைஅழிக்கும் வேலையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் இறங்கியுள்ளார் என குற்றஞ்சாட்டினார்.
தமிழிசை தனது அதிகாரத்தை கையில் எடுத்துள்ளதால் தான் முதலமைச்சர் ரங்கசாமி ஆதங்கப்படுகின்றார். முதல்வரை சுதந்திரமாக செயல்பட விடவில்லை என்றும் அதை தட்டிகேட்க ரங்கசாமிக்கு திரானி இல்லை என்ற அவர், தமிழிசை செளந்தரராஜன் புதுச்சேரி அரசுக்கு என்ன ஒத்துழைப்பு கொடுக்கின்றார் என்ற தகவலை பொது மக்கள் மத்தியில் சொல்ல வேண்டும். எத்தனை கோப்புகளுக்கு அவர் கையெழுத்திட்டார் என்பதை பகிரங்கமாக பட்டியலிட வேண்டும் என வலியுறுத்தினார்.அதிகாரம் வேண்டும் என்று நாங்கள் மத்திய அரசிடம் கேட்கவில்லை.  சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி புதுச்சேரிக்கு மாநில அந்த்ஸ்த்து வழங்க வேண்டும்   என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2019ல் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து  புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என வலியுறுத்தினேன் என விளக்கம்அளித்த நாராயணசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணனின் முகம் என்னெவென்று தோலுரித்து காட்டுவேன். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். விடுதலை புலிகளின் மிரட்டலையே எதிர்கொண்டவன். என் வீட்டில் வெடிகுண்டு வைத்தார்கள். அதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என நாராயணசாமி ஆவேசமடைந்தார்.தொடர்ந்து பேசிய அவர், பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கொள்கையில் உறுதியாக இல்லை, கொள்கை முரன்பாடு உள்ள கட்சிகள் கூட்டணியில் நிலைக்க முடியாது. மாநில அந்தஸ்த்து விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி தெருவில் இறங்கி போராடினால் நாங்கள் கையெழுத்திட்டு இணைந்து போராட தயார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழகத்திலும் திமுக தற்போது ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த ஆட்சியிலும் புதிய கல்விக்கொள்கையை கொண்டு வரவிடமாட்டோம் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்தார்.

Related Articles

Back to top button
Close
Close