fbpx
Others

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்..

பிரதமர் மோடி அவர்கள் விவசாயிகளுக்கு கடந்த 2014 & 2019 தேர்தல் அறிக்கைகளில் வாக்குறுதியாக வழங்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமல் விவசாயிகளை வஞ்சிப்பதை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் !!! நாள்- 27-02-2024 (செவ்வாய்க்கிழமை) ஒருநாள் ஓட்டு நாம் பதிவு செய்ததின் விளைவு   இடம் – பொங்கலூர் பேருந்து நிறுத்தத்தின் முன்பு.நேரம் – காலை 11 மணியளவில்,உயிரினும் மேலான உழவர் உறவுகளுக்கு,இந்தியா ஒரு விவசாய நாடு, விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு என சொல்வதற்கு இனிமையாக இருக்கலாம், ஆனால் மத்திய – மாநில அரசுகளின் கொள்கைகளால் விவசாயிகள் இந்த நாட்டின் அடிமைகளாக மாற்றப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.உலகத்திற்கு உணவளிக்கும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென உழவர் பெருந்தலைவர் ஐயா நாராயணசாமி நாயுடு அவர்கள் ஒன்பது அம்ச கோரிக்கையாக வைத்து, அன்றுமுதல்இன்றுவரைதலைமுறைதலைமுறையாகவிவசாயிகள்ஏமாற்றப்பட்டுவருகிறார்கள்.விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட M.S. சாமிநாதன் அவர்களின் தலைமையிலானஆணையத்தின்அறிக்கையின்  படி, உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் ,கொள்முதல் செய்ய வேண்டுமென 2006 வழங்கப்பட்ட பரிந்துரையை அன்றைய காங்கிரஸ் அரசும் அமல்படுத்தவில்லை, கடந்த 2014 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு உற்பத்தி செலவுடன் 50% சேர்த்து விலை நிர்ணயம் செய்வோம், கொள்முதல் செய்வோம் என விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றி விட்டார்.கடந்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயர்த்தப்படும் என அறிவிப்பு செய்து அதையும் அமல்படுத்தாமல் ஏமாற்றி விட்டார், மேலும் வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற்றபோது விவசாய சங்கங்களுக்கு கடிதத்தின் மூலமாக அளித்த உறுதியின்படி M.S.சாமிநாதன் ஆணையத்தின் படி விலை நிர்ணயமும், கொள்முதலும் செய்யப்படும் என்கிற என்கிற வாக்குறுதியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை.கடந்த 10 ஆண்டுகளில் 14 லட்சம் கோடிகளை பெரு நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்துள்ள மத்திய அரசு விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட கடன் தள்ளுபடி செய்யாதது அநியாயத்தின் உச்சகட்டம்.மாண்புமிகு பிரதமர் அவர்கள் தன்னுடைய நண்பர் அதானி அவர்கள் பெரும் லாபம் ஈட்டுவதற்காக பாமாயிலுக்கு எதிரான இறக்குமதி வரி 44 % மாக இருந்ததை 32 % மாக குறைத்தனால், தேங்காய் எண்ணெயை விட பாமாயிலின் சந்தை விலை லிட்டருக்கு ரூ. 40 குறைந்ததால் தேங்காய் எண்ணையின் சந்தையை பாமாயில் பிடித்துக் கொண்டதால், தேங்காய் எண்ணெய் விற்பனை ஆகாததால் இருபது ரூபாய்க்கு விற்று வந்த ஒரு தேங்காய், தற்போது பத்து ரூபாய்க்கு விற்று வருவதால் இந்தியாவில் உள்ள ஒரு கோடியே 10 லட்சம் தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே பத்தாண்டுகளாக விவசாயிகளுக்கு அளித்த எவ்வித வாக்குறுதியையும் நிறைவேற்றாமல், விவசாயிகளை வஞ்சிப்பது என்பது விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகும். மேலும் பஞ்சாப் எல்லையில் அமைதியாக அறவழியில் போராடும் விவசாயிகள் மீது கொடுமையாக ஆயுத தாக்குதல் நடத்தி இளம் விவசாயி சுபாகரன் சிங் யை கொடுமையாக கொலை செய்துள்ளார்கள். மேலும் 5 விவசாயிகளின் உயிர் மருத்துவமனையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.மேலும் அளித்த வாக்குறுதி நிறைவேற்ற கோரி டெல்லியில் போராடுகிற விவசாயிகள் மீது தவறான அவதூறுகளை தொடர்ந்து பாரதிய ஜனதா செய்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.எனவே தேர்தல் பரப்புரைக்காக திருப்பூர் மாவட்டம், பல்லடத்திற்கு வருகை தர உள்ள மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களின் வருகையை கண்டித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நடைபெற உள்ள கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாட்டு விவசாயிகள், உழவர் போராளிகள், விவசாய சங்க தலைவர்கள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்குவழக்கறிஞர் ஈசன் முருகசாமி  நிறுவனர்  இரா. சண்முகசுந்தரம்

மாநில தலைவர் சு. முத்து விஸ்வநாதன், மாநில பொதுச் செயலாளர்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் , விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த மாபெரும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்திடுவோம் வாரீர் !!! வாரீர் !!!……ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் -அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close