fbpx
Others

தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக — சிறப்பு துறை

 தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அமைச்சர்கள், சேகர்பாபு, மதி வேந்தன், ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், கா.ராமச்சந்திரன், பழனிவேல் தியாகராஜன், முத்துசாமி, மெய்யநாதன் ஆகியோர் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புதிட்ட செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள்,மற்றும் ஊரக கடன்கள் போன்ற துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. சிறப்புதிட்ட செயலாக்கத்துறை என்பது இது கிட்டத்தட்ட ஒரு சூப்பர் பவர் போன்றது. இந்த துறையை வைத்து இருக்கும் அமைச்சர். எந்த துறைக்கு கீழ் வேண்டுமானாலும் நலத்திட்டங்களை அறிவிக்க முடியும்.  உதாரணமாக கல்வித்துறை அமைச்சர் போக்குவரத்து துறையில் அறிவிப்புகளை வெளியிட முடியாது. ஆனால் இந்த சிறப்பு திட்ட செயலாக்க துறையை கையில் வைத்து இருக்கும் அமைச்சர் எந்த துறையில் வேண்டுமானாலும் சிறப்பு திட்டங்கள் என்ற பெயரில் அறிவிப்புகளை வெளியிட முடியும். பல்வேறு துறைகளில் தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. துறை ரீதியான அறிவிப்பு இல்லாமல், ஒவ்வொரு துறையிலும் சில சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும். முதல்- அமைச்சர் தான் இந்த சிறப்பு திட்டங்களை அறிவித்து வந்தார். அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த இந்த துறை உருவாக்கப்பட்டு உள்ளது. சிறப்பு திட்டங்களை கண்காணிக்கவும் இந்த துறை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு திட்டங்களை கண்காணிக்க தனியாக ஒரு துறை தமிழ்நாட்டில்தான் வரலாற்றிலேயே முதன்முறையாக தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற துறைகளுடன் இந்த துறை அமைச்சர் (முதல்-அமைச்சர்) இணைந்து செயல்படுவார். தற்போது முதல்-அமைச்சரிடம் இருந்து உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த துறை சென்றுள்ளது. இதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்படும் “சிறப்பு” திட்டங்களை கண்காணிக்க முடியும். அந்த திட்டங்களை இன்னும் சிறப்பாக எப்படி செய்வது என்பது தொடர்பாக இந்த துறை ஆலோசனைகளை வழங்க முடியும். மற்ற துறைகளை கண்காணிக்கும் வாய்ப்பு உதயநிதிக்கு கிடைக்கும். இதன் மூலம் மற்ற துறைகளுடன் உதயநிதி இணைந்து பணியாற்ற முடியும். அதேபோல் சீனியர் அமைச்சர்களுடன் உதயநிதி ஸ்டாலின் இணைந்து பணியாற்ற முடியும். அதேபோல் பல துறைகளில் உதயநிதி அனுபவம் பெறுவதற்கு வசதியாக இந்த துறை வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறப்புதிட்ட செயலாக்கத்துறை செயல்படும் முறை முக்கியமாக வேளாண்மை, கல்வி, நீர், சுகாதாரம், ஊரக வளர்ச்சி, தொழில்கள் மற்றும் கட்டமைப்பு ஆகிய துறைகள் மீது அதிகம் கவனம் செலுத்துவதற்காக இந்த சிறப்பு துறை உருவாக்கப்பட்டு உள்ளது. கல்வி துறையில் ஒரு சிறப்பு அறிவிப்பை இந்த சிறப்புத்திட்ட செயலாக்கம் துறை அறிவிக்கிறது என்றால், கல்வித்துறையோடு இணைந்து அந்த திட்டத்தை சிறப்புத்திட்ட செயலாக்கம் துறை செயல்படுத்தும்  அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தவும், அவற்றைக் கண்காணிக்கவும் இதற்கெனத் தனியாக ஒரு துறை தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close