தமிழக போலீஸார் புதுச்சேரி சாராயக்கடையில்சோதனை…?


புதுச்சேரி சாராயக்கடையில் தமிழக போலீஸார் சோதனையிட்டதற்குசாராயக்கடை உரிமையாளர்கள்எதிர்ப்புதெரிவித்துஇன்றுகூட்டம்நடத்தினர்.பொய்வழக்குபோடுவதாகமுதல்வரிடம்மனுஅளிக்கஉள்ளனர்கள்ளக்குறிச்சிஎரிசாராயம்சம்பவத்தைத்தொடர்ந்துதமிழகபோலீஸார்புதுச்சேரிஎல்லைபகுதிகளில்சோதனைகளைதீவிரப்படுத்தியுள்ளனர். விழுப்புரம் அடுத்தகெங்கராம்பாளையத்தில் தமிழக போலீஸார் நடத்திய வாகன சோதனையில், சாராய பாக்கெட்டுகள் கொண்டு சென்ற நபர் பிடிபட்டார்.அதன் அடிப்படையில் தமிழக போலீஸார் தமிழக எல்லையிலுள்ள புதுச்சேரி திருபுவனை அருகேயுள்ள ஆண்டியார்பாளையம் சாராயக்கடையில்சோதனைநடத்தி,அங்கிருந்த40பாக்கெட்சாராயம்,பாக்கெட்போடும்மிஷின்ஆகியவற்றைபறிமுதல்செய்தனர்.சாராயவிற்பனையாளர்பிரம்மநாதனையும்கைதுசெய்தனர்.புதுச்சேரி போலீஸார் அனுமதி இல்லாமல் சாராயக்கடையில் தமிழக போலீஸார் சோதனை நடத்தியதுதொடர்பாகசாராயக்கடைஉரிமையாளர்கள்நேற்றுஆலோசனைநடத்தினர்.அதன்பிறகு அவர்கள் கூறியதாவது: தமிழக காவல்துறை புதுச்சேரி சாராயக்கடைகளில் சோதனை செய்துபொய்வழக்கைபதிவுசெய்துதொழில்நடத்தவிடாமல்செய்கிறார்கள்.தொழில்நடத்தமுடியாதசூழலைமுதல்வரிடம்தெரிவிக்கவுள்ளோம்.இதனால்புதுச்சேரிஅரசுக்குவருவாய்வராது, கிஸ்திகட்டமுடியாது.புதுச்சேரியில் நாலரை லிட்டர் வரை சாராயம் தரலாம். தற்போது சில பாக்கெட்டுகளைவைத்துஉரிமையாளர்கள்மீதுதமிழகபோலீஸார்வழக்குபதிந்துள்ளனர்.டாஸ்மாக்தமிழகத்துக்குமுக்கியம்.அதேபோல்தான்சாராயக்கடை,மதுக்கடைகள்புதுச்சேரிக்குமுக்கியம்.தமிழகபோலீஸாரால்எங்களுக்குநெருக்கடியானசூழல்ஏற்படுகிறது.புதுச்சேரி போலீஸ் இல்லாமல் தமிழக போலீஸார் நேரடியாக நடவடிக்கை எடுப்பது சட்ட விரோதம். புதுச்சேரியில் கள்ளச்சாராயம் இல்லை. தமிழகத்தில் விற்கிறார்கள். அங்கு அதை தடுக்க வேண்டியது தமிழக போலீஸ் கடமை. அதை விடுத்து புதுச்சேரி அரசு உரிமம் உள்ள கடையில் நடவடிக்கை எடுப்பது சரியானது அல்ல. இதற்காக முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திக்கவுள்ளோம்இந்த விவகாரத்தில் உரிய முடிவு எடுக்காவிட்டால் கடையை நடத்த முடியாத சூழல் உள்ளது. தமிழக போலீஸரால் பாதிப்பு உள்ளதாக திங்கள்கிழமை முதல்வரிடம் மனு அளிக்கிறோம் என்றனர்.