நில அளவியர் அலுவலர்கள்அடையாள வேலைநிறுத்தம்..பொதுமக்கள்மனவேதனை..
தமிழ்நாடு முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசைக்கண்டித்து அடையாள வேலை நிறுத்தம் செய்வதாக நில அளவியர் அலுவலர்கள் இன்று 9 12 2024 திங்கட்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் இதுகுறித்து ஏற்கனவே அரசாங்கத்திற்கு முன்னறிவிப்பு செய்து முறைப்படி நடைபெற்றதாக சங்கத்தின் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர் ஆனால் இதனுடைய முன்னறிவிப்பு தெரியாமல் அநேக பொதுமக்கள் வந்து நில அளவு அலுவலகத்தில் தங்களுடைய பத்திரங்களை காண்பிக்கும்படியும்,சந்தேகங்களை கேட்கும் படி யும் திங்கட்கிழமை தோறும் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்களை சந்திப்பது வழக்கம் .ஆனால் இந்த நாளிலே மக்களை சந்திக்க மறுத்துவிட்டனர்.இது பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை தந்தது வந்த பொதுமக்கள் ஏமாற்றுத்துடன் திரும்பி போனார்கள் இதுப்பற்றிபொதுமக்கள்தெரிவித்தபோதுஇதுபோன்றஅவலங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. எங்களது நில அளவியல் காலதாமதம் படுத்துகிறார்கள். இந்த சூழ்நிலையில் இன்று இப்படிப்பட்ட காரியம் நடப்பது எங்களுக்கு மனவேதனையை தருகிறது இது குறித்து அரசாங்கம் தலையிட்டு இதை தீர்த்து வைக்கு
ம் படி பொதுமக்கள் தெரிவித்தனர்.