Others
தமிழக அமைச்சரவை மாற்றம் விவரம்…..

தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின், மீண்டும் அமைச்சராகசெந்தில்பாலாஜிபதவியேற்கவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (செப்.29) பிற்பகல் 3.30 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்புநிகழ்வுநடைபெறும்எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக ஆளுநர் மாளிகை சனிக்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பாக வெளியான தகவல்கள்: தமிழக அமைச்சரவையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றார். குறிப்பாக, 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சர் வி.மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழிசெல்வராஜுக்குமனிதவளமேம்பாட்டுத்துறைஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.வனத்துறைஅமைச்சராகஇருந்தமதிவேந்தனுக்கு,ஆதிதிராவிடர்நலத்துறைக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.அமைச்சர்ராஜகண்ணப்பனுக்கு பால் வளத்துறை ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.நிதிஅமைச்சர்தங்கம்தென்னரசுக்குகூடுதலாகசுற்றுச்சூழல்மாசுக்கட்டுப்பாட்டுவாரியம்மற்றும்காலநிலைமாற்றம்துறைஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.மொத்தம்6பேரின்இலாக்காக்கள்மாற்றியமைக்கப்பட்டுள்ளன.தமிழக அமைச்சரவையில்இருந்துமனோதங்கராஜ், செஞ்சிமஸ்தான் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோ.வி.செழியன் மற்றும் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோரின் பெயர்களை முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார்.