fbpx
Others

தமிழகம் முழுவதும் 21 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகம் முழுவதும் 21 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கு சப்-கலெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா வெளியிட்டுள்ளஉத்தரவில்கூறியிருப்பதாவது:நாகப்பட்டினம் மாவட்டம் சப் -கலெக்டராக பணியாற்றி வந்த பனோத் முருகேந்தர் லால், கோவை வணிக வரிகள் மற்றும் மாநில வரிகள் இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஒன்றிய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார துறை உதவி செயலாளராக பணியாற்றி வந்த வி.எஸ்.நாராயண சர்மா, செங்கல்பட்டு மாவட்ட சப்-கலெக்டராகவும், பள்ளி கல்வித்துறை உதவி செயலாளராக பணியாற்றி வந்த திவ்யன்ஷூ நிகம், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சப்-கலெக்டராகவும், பழங்குடியின நலத்துறை உதவி செயலாளராக பணியாற்றி வந்த பொன்மணி, சேலம் மாவட்டம் மேட்டூர் சப்-கலெக்டராகவும், திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் உதவி செயலாளராக பணியாற்றி வந்த கேத்தரின் சரண்யா, கோவை மாவட்டம் சப்-கலெக்டராகவும், உயர்கல்வித்துறை உதவி செயலாளராக பணியாற்றி வந்த பிரியங்கா, ஓசூர் சப்-கலெக்டராகவும், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் துணை செயலாளராக பணியாற்றி வந்த குணாள் யாதவ், நாகப்பட்டினம் சப்-கலெக்டராகவும், வணிகவரித்துறை துணை செயலாளராக பணியாற்றி வந்த வாஹே சன்கேத் பல்வந்த், பொன்னேரி சப்-கலெக்டராகவும், பொருளாதார விவகாரத்துறை அமைச்சகத்தின் உதவி செயலாளராக பணியாற்றி வந்த ஆர்பித் ஜெயின், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி சப்-கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒன்றிய அரசின் தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை உதவி செயலாளராக பணியாற்றி வந்த அபிலாஷா கவுர், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சப்-கலெக்டராகவும், பஞ்சாயத்து ராஜ் துறை உதவி செயலாளராக பணியாற்றி வந்த பல்லவி வர்மா, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சப்-கலெக்டராகவும், பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் உதவி செயலாளராக பணியாற்றி வந்த எஸ்.கோகுல், பெரம்பலூர் சப்-கலெக்டராகவும், செலவினத்துறை அமைச்சகத்தின் உதவி செயலாளராக பணியாற்றி வந்த ராஷ்மி ராணி, கடலூர் மாவட்டம் சிதம்பரம் சப்-கலெக்டராகவும், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் உதவி செயலாளராக பணியாற்றி வந்த சவுமியா ஆனந்த், திருப்பூர் சப்-கலெக்டராகவும்நியமிக்கப்பட்டுள்ளனர். பொன்னேரி சப்-லெக்டராக பணியாற்றி வந்த ஐஸ்வர்யா, தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் மற்றும் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். செய்யாறு துணை கலெக்டராக பணியாற்றி வந்த ஆனாமிகா, செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் மற்றும் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சப்-கலெக்டராக பணியாற்றி வந்த எச்.ஆர்.கவுசிக், உதகமண்டலம் கூடுதல் கலெக்டராகவும் (வளர்ச்சி), திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் சபீர் ஆலம், மயிலாடுதுறை கூடுதல் கலெக்டராகவும், பரமக்குடி சப்-கலெக்டர் அல்தாப் ரசூல், புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் கலெக்டராகவும், தூத்துக்குடி சப்-கலெக்டர் கவுரவ் குமார், தர்மபுரி மாவட்ட கூடுதல் கலெக்டராகவும், சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதா சுமன், கோவை கூடுதல் கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

 

Related Articles

Back to top button
Close
Close