fbpx
Others

தமிழகத்தில் மின்தடை ஏற்படும் அபாயம்….கடன்பாக்கி….?

பாக்கி தொகை செலுத்தாததால், தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சார வர்த்தகத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.தமிழ்நாடு, தெலுங்கானா, ம.பி., மிசோரம், ஜார்க்கண்ட், பீகார், ராஜஸ்தான், ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் ஆகஸ்ட் 19 முதல் மின்சார வர்த்தகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மின் தடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மின்சாரம் விநியோக நிறுவனங்கள்(discoms) மற்றும் மின்சாரம் உற்பத்தி நிறுவனங்கள்(gencos) நிலுவைத் தொகையை செலுத்தாததற்காக மின் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட விதிகளின் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய லேட் பேமென்ட் சர்சார்ஜ் (எல்பிஎஸ்) விதிகளின் கீழ் இந்த நடவடிக்கை ஆகஸ்ட் 19 (நாளை)  முதல் அமலுக்கு வரும்.  LPS விதிகள்படி,  ஏழு மாதங்களுக்கும் மேலாக ஜென்கோஸுக்கு  டிஸ்காம்கள் நிலுவை தொகையை செலுத்தாமல் இருந்தால் அவை மின்சார வர்த்தகத்தில் ஈடுபடமுடியாது. இந்தச் செய்தி இந்திய எரிசக்தி பரிவர்த்தனையை (IEX) அழுத்தத்திற்கு உள்ளாக்கியது, ஏனெனில் IEX இல் வர்த்தகம் செய்யப்படும் அளவுகள் விரைவில் பாதிக்கப்படலாம்.

தமிழகத்தில் மின்தடை ஏற்படாமல் தடுங்கள் – ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை…..!
பாமக நிறுவனர் ராமதாஸ்

மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டண பாக்கி வைத்துள்ள தமிழகம் உட்பட 13 மாநிலங்கள் இன்று முதல் மின்சாரத்தை வாங்கவோ, விற்கவோ மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது,  “மின்சார சந்தையில் வாங்கிய மின்சாரத்திற்காக மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.926 கோடியை செலுத்தத் தவறியதால், மின்சந்தையிலிருந்து மின்சாரம் வாங்கவும், விற்கவும் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது பெரும் பின்னடைவு ஆகும்.

தமிழகத்தின் தேவையில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே தமிழக அரசால் உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய அரசு, தனியார் நிறுவனங்களிடம் வாங்குவது தவிர, மின் சந்தையிலிருந்து மின்சாரத்தை வாங்கி தான், தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையை மின்வாரியம் சமாளித்து வருகிறது.

தமிழகத்தில் காற்றாலை மின்னுற்பத்தி குறையத் தொடங்கியுள்ள நிலையில், மின்சார சந்தையில் மின்சாரத்தை வாங்க முடியாவிட்டால் தமிழகத்தில் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்படக்கூடும். பொதுமக்களின் வாழ்க்கையை மட்டுமின்றி, தொழில் உற்பத்தி மற்றும் வணிகத்தையும் இது பாதிக்கக் கூடும்.மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவையை மின்வாரியம் உடனடியாக செலுத்தி தடையை விலக்கச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் மின்தடை ஏற்படாமல் இருப்பதை தமிழக அரசும், மின்சார வாரியமும் உறுதி செய்ய வேண்டும்.”என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளா

 

Related Articles

Back to top button
Close
Close