fbpx
Others

தபால் துறை உயர்அதிகாரிகள் கண்டு கொள்ளாதது ஏன்…?

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை !  சென்னைக்கு அருகே. செங்குன்றத்தில் செயல்படும் தபால் அலுவலகம். நெல் மண்டிகள் உள்ள பகுதியில் மாடியில் சுமார் 15 ஆண்டுகளாக. செயல்பட்டுவருகிறது.மூத்தகுடிமக்களுக்கும்,பெண்களுக்கும்மிகவும்சிரமத்தைஏற்படுத்துகிறது.மேலும். பொருட்களை பார்சல் அனுப்பும் வியாபாரிகளுக்கும், சேமிப்பு திட்டத்திலேயே பணம் கட்டும் வாடிக்கையாளர்களுக்கும். மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது.இந்த தபால் அலுவலகத்தில் சுமார் 20 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். வேலை நேரத்தில். பத்துக்கு மேற்பட்ட. பயனாளிகள். மாடி ஏறி மேலே சென்றால் அவர்கள் நிற்பதற்கு கூட இடமில்லை. பயனாளிகளுக்கும், தபால் அலுவலக ஊழியர்களுக்கும் மிகவும் சிரமத்தை. ஏற்படுத்தும் நிலையில். இந்த அலுவலகம் செயல்பட்டு வருகிறது.முதியோர் உதவித்தொகை,வாங்கவரும்பயனாளிகள்.மாடிப்படிகளில்ஏறமுடியாமல்.அவதிப்படுகின்றனர்.வடகரை. பாடியநல்லூர், புள்ளி லயன், தீர்த்த கிரியம்பட்டு, அழிஞ்சிவாக்கம், நல்லூர். உள்பட. 20க்கும் மேற்பட்ட. கிராம மக்களுக்கு. இந்த தபால் அலுவலகமே முக்கியமாக செயலாற்றுகிறது.எனவே. மக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படுத்தும் இந்த செங்குன்றம் தபால் அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். என்ற கோரிக்கையை சுற்று பகுதி சமூக ஆர்வலர்கள் வைத்துள்ளனர்.தபால் அலுவலகத்திற்கு. மாதா மாதம். வாடகை தரப்படுகிறது.எனவே.செயின்ட் மேரீஸ் பள்ளி எதிரில் உள்ள டெலிபோன் எக்சேஞ்ச் அலுவலக வளாகத்தில் உள்ள இடத்தில் புதிய கட்டிடம் கட்டி அங்கேதபால்அலுவலகம்செயல்படுத்தலாம் அரசுக்கு வாடகை மிச்சம் பயனாளிகளுக்கு சிரமம் இருக்காது. உரிய அதிகாரிகள் உடனே கவனிக்க வேண்டும்.

Related Articles

Back to top button
Close
Close