fbpx
Others

‘தனியார் மயத்தால் மின் பாதிப்பு ஏற்படாது’—-கவர்னர் தமிழிசை உறுதி

. புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்கும் வகையில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கவர்னருடன் ஆலோசனை புதுவையில் மின்துறை ஊழியர்கள் இன்று 3-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த போராட்டம் காரணமாக அவ்வப்போது ஏற்படும் மின் தடைகள் சரிசெய்யப்படாததால் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இரவு, பகலாக பல மணிநேரம் பழுதுகள்தனியார் மயத்தால் பாதிப்பு ஏற்படாது என கவர்னர் தமிழிசை உறுதி சரிசெய்யப்படாதால் ஏற்படும் மின்வெட்டால் அதிருப்தியடையும் பொதுமக்கள் மாநிலம் முழுவதும் இன்று பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் கவர்னர் மாளிகைக்கு இன்று காலை முதல்-அமைச்சர் ரங்கசாமி சென்றார். அங்கு அவர் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, மின்துறை செயலாளர் அருண், கவர்னரின் செயலாளர் அபிஜித் விஜய் சவுத்ரி ஆகியோர் உடனிருந்தனர். 40 நிமிடம் ஆலோசனை இந்த கூட்டத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான மின் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபடுவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் சமாளிப்பது குறித்தும், மின்துறை ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. காலை 10.30 மணிமுதல் 11.10 மணிவரை 40 நிமிடம் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன்பின் வெளியே வந்த முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிருபர்கள் கேட்டனர். ஆனால் அவர் பதில் ஏதும் தெரிவிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார். அதன்பின் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானாவுக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- விவாதித்தது என்ன? புதுவை மின்துறை ஊழியர்களின் போராட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் மற்றும் தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்தினேன். தற்போது உள்ள சூழ்நிலையை சமாளிப்பது எப்படி? என்பது குறித்து விவாதித்தோம். Also Read – தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சாலை மறியல் தனியார்மயமாவதால் மின்துறை ஊழியர்களும், அதிகாரிகளும் எந்தவிதத்திலும் பாதிக்கப்படமாட்டார்கள். சட்டப்பூர்வமாக அவர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதைப்பற்றி விவாதித்தோம். அதுமட்டுமின்றி தற்போதுள்ள காய்ச்சல் சூழ்நிலை, ஆஸ்பத்திரிகளை மேம்படுத்துவது, நூலகங்களை பார்வையிட்டது பற்றியும் விவாதித்தோம். இது ஒரு ஆக்கப்பூர்வமான சந்திப்பு. மக்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம். போராட்டம் இருக்க கூடாது, பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதைத்தான் இந்த கூட்டத்தில் விவாதித்தோம். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பாதிப்பு இருக்காது அரசு நல்ல முடிவுகளை எடுக்கிறது. அதை மின்துறை ஊழியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் அனைவரும் வெளிச்சத்தில் இருக்கவேண்டும். யாரும் இருட்டில் இருக்கக்கூடாது என்பதுதான் அரசின் முடிவு. அதனால் எந்த வகையிலும் மக்களும், மின்துறை ஊழியர்களும், அதிகாரிகளும் பாதிக்கப்படமாட்டார்கள். அரசு எடுக்கும் முடிவினால் மக்களுக்கு மின்கட்டணம் அதிக அளவு குறையும். மின் இழப்பும் மிக அதிக அளவு குறையும். இது பல மாநிலங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் நல்லது நடக்கும். எந்த நடவடிக்கையும் மக்களுக்கும், ஊழியர்களுக்கும் எதிராக இருக்காது. விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ந்து மக்களுக்கு நல்லது என்பதற்காக மட்டுமே தனியார்மயம் ஒப்புக்கொள்ளப்பட்டு இருக்கிறது என்பது என்னுடைய கருத்து. அதை புரிய வைப்போம். நல்லதல்ல ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் எந்தவிதத்திலும் மக்களுக்கு இடையூறு செய்யவேண்டாம். ஏனெனில் பல மாற்று கருத்துகள் இருக்கலாம். ஆனால் மக்களுக்கு மின்தடையை ஏற்படுத்துவது நல்லதல்ல. குழந்தைகள் தற்போது தேர்வுக்கு படிக்கிறார்கள். நோயாளிகள் வீட்டில் இருப்பார்கள். சில முக்கியமான மங்களகரமான நிகழ்வுகள் இருக்கும். அதனால் நம் சுயநலத்துக்காக மின்தடையை ஏற்படுத்தினால் அது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அரசுக்கு எந்த கோரிக்கையையும் வைக்கலாம். அதற்கு சரியான விளக்கம் அளிக்கப்படும். யாரும் பாதிக்கப்படாமல் அனைவரும் பயடையும் முடிவுகளைத்தான் அரசு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close