தஞ்சாவூர்-தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியை ரமணி கொலை..
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினம் அரசுமேல்நிலைப் பள்ளியில் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாகப் பணிபுரிந்துவந்த செல்வி ரமணி (வயது 26) இன்று (நவ. 20) காலை பள்ளி வளாகத்தில் இருந்தபோது மதன்குமார் என்ற நபரால்கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஆசிரியை மருத்துவமனைக்குகொண்டு சென்ற நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில்அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-ஆசிரியை கொலை செய்யப்பட்ட அரசுப் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்ட பிறகே
பள்ளி திறக்கப்படும். மல்லிப்பட்டினம் அரசுப்பள்ளியில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். கொடூரமான செயல்களில் ஈடுபடுவோருக்கு உரிய தண்டனைகிடைக்க
வேண்டும் என்றார்.தஞ்சாவூர் மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணி உடலுக்கு மாலைஅணிவித்துஅஞ்சலிசெலுத்தி,அவரதுகுடும்பத்தினருக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல் கூறினார்,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாகப் பணிபுரிந்துவந்த செல்வி ரமணி (வயது 25) த/பெ.முத்து அவர்கள் இன்று (20:11.2024) காலைபள்ளிவளாகத்தில்இருந்தபோதுமதன்குமார் என்ற நபரால் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார் என்றசெய்தியைக்கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக உயர்கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் உயிரிழந்த ஆசிரியை அவர்களின் குடும்பத்தினருக்கு
ஆறுதல் தெரிவிக்க அனுப்பிவைத்தேன். பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டுள்ள இச்சம்பவமானது மிகவும் மிருகத்தனமானது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி
காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு குற்றவாளிக்கு விரைவில் சட்டப்படிதண்டனை பெற்றுத்தரப்படும். கிராமப்புறப் பகுதியில் கல்விப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட செல்வி ரமணி அவர்களின் உயிரிழப்பு பள்ளிக் கல்வித் துறைக்கும்.சக ஆசிரியர்களுக்கும். மாணவர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். செல்வி ரமணி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும். அவரதுஉறவினர்களுக்குஎனதுஆழ்ந்தஇரங்கல்களையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, செல்வி ரமணி அவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய்முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். என தெரிவித்துள்ளார்.