fbpx
Others

தங்கள் நாட்டு குடிமக்கள் ஈரானிலிருந்து உடனடியாகவெளியேற வேண்டும்…?

ஈரான் தனது அணு சக்தியை பெரிய அளவில் வளர்த்து வருகிறது. இது தனக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக கூறும் அமெரிக்கா, உடனே இந்த நடவடிக்கையை கைவிட வலியுறுத்தியுள்ளது. ஆனால், தாங்கள் அணு ஆயுதங்களை தயாரிக்கவில்லை என்றும், மருத்துவChina and Multiple Nations Issue Urgent Exit Iran Now Orders நோக்கங்களுக்காகவேஅணுசக்தியைபயன்படுத்துகிறோம் என ஈரான் விளக்கமளித்துள்ளது.இப்படி இருக்கையில், அணு சக்தி விவகாரம் தொடர்பாக, ஈரான்-அமெரிக்கா இடையே ஒப்பந்தம் போடப்பட வேண்டும் என்றும், அதில் நாங்கள் சொல்வதை ஈரான் கேட்க வேண்டும் எனவும் டிரம்ப் வலியுறுத்தியிருந்தார். ஆனால், ஈரான் இன்னும் ஒப்பந்தத்தில்கையெழுத்தைபோடவில்லை.இதற்கிடையில், டிரம்ப் தனது சக்தி வாய்ந்த 2 விமானம் தாங்கி போர்க்கப்பல்களை ஈரான் கடல் பகுதியில் நிலை நிறுத்தி வைத்திருக்கிறார். ஒப்பந்தம் போடவில்லை எனில் தாக்குதல்தான் என எச்சரித்திருந்தார். இந்த ஒப்பந்தம் குறித்துஇன்றுவெள்ளைமாளிகையில்செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரானுடன் நடந்த பேச்சுவார்த்தையில் தனக்கு திருப்தி இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்கிற நிலை உருவாகியுள்ளது. அதேபோல முன்னெப்போது இல்லாத அளவில் இஸ்ரேலில்அமெரிக்காதனதுபோர்விமானங்களைகுவித்துவைத்திருக்கிறது.இதெல்லாம்நிலைமையை பதற்றமாக்கியுள்ளது. எனவே, உடனடியாக தங்கள் நாட்டு குடிமக்கள் ஈரானிலிருந்து வெளியேற வேண்டும் என சீன, அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள்வலியுறுத்தியுள்ளன. அதேபோல, இஸ்ரேலுக்கு பயணிக்க வேண்டாம் என்றும் ஜெர்மன் தங்கள் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close