fbpx
Others

டெல்லி சட்டப்பேரவையிலும் கவர்னருக்கு எதிராக தீர்மானம்….

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்என் ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்திவந்தார். மேலும் மசோதாவை நிலுவையில் வைத்தால் நிராகரித்ததாக அர்த்தம் என்று பேசினார். இதையடுத்து அவருக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய அரசு வழங்க வலியுறுத்தி தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டது.இதைத் தொடர்ந்து, பாஜ அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். அதில் தமிழ்நாட்டை போல பாஜ ஆளாத மாநிலங்கள் அனைத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி இருந்தார். இந்த கடிதத்திற்கு பதில் அளித்து கெஜ்ரிவால் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டு தெரிவித்துள்ளார். நாளை டெல்லி சட்டப்பேரவை கூட உள்ள நிலையில், சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலகெடு விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக கெஜ்ரிவால் கூறியுள்ளார்.   தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை போன்று டெல்லி சட்டப்பேரவையில் நிறைவேற்ற உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பாஜ ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் ஒன்றிய அரசு மேற்கொள்ளும் தொந்தரவு நடவடிக்கைகளை கண்டிப்பதாகவும், இது தொடர்பாக மு.க ஸ்டாலின் முன்னெடுத்துள்ள முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close