டி.என்.பாளையம் அருகே மது விற்றவர் கைது….போதைபொருள்விற்பனை:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளடி. என்.பாளையத்தை அடுத்த டி.ஜி புதூர் நால்ரோடு காளியூர் அருகே பங்களாப்புதூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்றதாக அதே பகுதியை சேர்ந்த குமார் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 27 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்
கோபி அருகே கடையில் போதைபொருள் விற்பனை: மூதாட்டி கைது
கோபிச்செட்டிப்பாளையம் அருகே தடைசெய்யப்பட்ட போதை புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தபெட்டிக்கடைக்கார மூதாட்டி கைது செய்யப்பட்டார்.கோபி அடுத்த அளுக்குளி பஸ் ஸ்டாப் அருகில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், மற்றும் கூல்லிப் போன்ற பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த பெட்டிக்கடைக்கார மூதாட்டி மாராள்(70) என்பவரை எஸ். ஐ. சக்திவேல் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 135 கிராம் ஹான்ஸ் மற்றும் கூல்லிப் போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்