fbpx
Others

டிஜி.பி—போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை …

குற்ற வழக்குகளில் திறம்பட செயல்படாத போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை உயர் நீதிமன்றத்தில் டிஜி.பி தகவல்

குற்றவாளிகள் விடுதலை ஆன வழக்குகளை எல்லாம் ஆய்வு செய்துகுற்றவழக்குகள் திறம்பட செயல்படாத போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு டிஜி.பி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.வக்கீல் வி. நடராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது ;- போலீசாரால் பதியப்படும் குற்ற வழக்குகளல் குற்றம்சாட்டப்பட்டவர்கள்,அந்தவழக்குகளில்விசாரணையின் போது போதிய ஆதாரங்கள் இல்லாததால் கோர்ட்டுகளால் விடுதலை பெற்றுவிடுகின்றனர். இவ்வாறு விடுதலை ஆகும் எண்ணிக்கை அதிகரிகரித்துக் கொண்டே போகிறது.எனவேதான் இந்த வழக்குகளை ஆய்வு செய்ய போலீஸ் மற்றும்குற்றத்தொடர்புத்துறைமூத்தஅதிகாரிகளை கொண்ட குழுக்களை அமைக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு கடந்த 2014ம் ஆண்டு சுப்பீம் கோர்ட்டு ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது.இந்த குழு விசாரணையில் உள்ள குறைகளை கண்டறியவும், இளம் போலீஸ் அதிகாரிகளுக்கு போதிய பயிற்சி அளிக்கவும், வழக்கை திறம்பட எடுத்துச் செல்லாத போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று அந்த வழக்கில் தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட்டு கூறியிருந்தது.இந்த தீர்ப்பைஅமல்படுத்தும்படிதமிழ்நாடுஅரசுமனுகொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அதில் கூறியிருந்தார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா, நீதிபதி.டி. பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது டிஜி.பி. சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பின்னர் போலீஸ் மற்றும் குற்ற வழக்கு தொடர்புதுறை அதிகாரிகள் கொண்ட குழுக்கள் மாநகரம், மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ளது.அதன்படி கடந்த 2023 ஆண்டு விடுதலை செய்யப்பட்ட வழக்குகள் மறு ஆய்வு செய்யப்பட்டு, திறம் பட செயல்படாத போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு இருந்தது.இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனுதாரர் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால், இவ்வழக்கை முடித்து வைப்பதாக உத்தரவிட்டனர்..

Related Articles

Back to top button
Close
Close