டிஜிபிசங்கர்ஜிவால்–காவல் அதிகாரிகள் 40 பேருக்கு பணியிட மாற்றம்….
சென்னை டிஜிபி அலுவலகத்தில் வாரந்தோறும் காவலர் குறைத்தீர்க்கும் முகாம் நடப்பது வழக்கமாகும்.. இந்த முகாமில், கலந்து கொள்ளும் காவலர்கள் டிஜிபி சங்கர் ஜிவாலிடம் மாவட்டம் விட்டு மாவட்டமும், மாநகரம் விட்டு மாநகரமும் பணியிட மாற்றம் கோரி மனு அளிப்பது வழக்கமான ஒன்றாகும். காவலர்கள் கோரிக்கை அதுமட்டுமல்லாமல், டிஜிபி சங்கர் ஜிவால் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆய்வு செல்லும் போதும் போலீசார் ஏராளமானோர் மனுக்களை வழங்குவார்கள்.. டிஜிபியிடம் போலீசார் அளிக்கும் இதுபோன்ற மனுக்களில், தகுதியுடைவர்களை கண்டறிந்து, தமிழகம் முழுவதும் காவலர்கள், முதல் நிலைக் காவலர்கள், தலைமை காவலர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஆகிய நிலைகளில் பணிபுரிபவர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபிசங்கர்ஜிவால்உத்தரவிடுவார்.அதேபோல, நிர்வாக காரணங்களுக்காகவும் காவல்துறையில் அவ்வப்போது பணியிட மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கமாகும். அந்தவகையில் சமீபத்தில்கூட, காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டிருந்தனர்.இது ஒருபுறம் இருக்க குற்றவாளிகள், தலைமறைவு குற்றவாளிகள், குற்றப் பின்னணி கொண்டவர்கள் என பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் மீது பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஅனைத்துமாவட்டபோலீசாருக்கும் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஏற்கனவே பிறப்பித்திருக்கிறார்.. மேலும், குற்றச் செயல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க வேண்டும். தடுக்க தவறும் போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் டிஜிபி எச்சரித்திருக்கிறார். 40 பேருக்குடிரான்ஸ்பர்இந்நிலையில், காவல் அதிகாரிகள் சிலரை பணியிட மாற்றம் செய்துடிஜிபிசங்கர்ஜிவால்உத்தரவிட்டுள்ளார். அதாவது, துணை காவல் கண்காணிப்பாளர், துணை ஆணையர் என 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.சென்னை, கடலூர், திருப்பத்தூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்த காவல் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 40 அதிகாரிகள் மாற்றம் செய்துள்ளது, பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது.