fbpx
Others

ஜெயலலிதா முதல் ராகுல் வரைபதவியில் இருக்கும்போது தகுதி நீக்கம்

  • வதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்று தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து வயநாடு எம்பி பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951(Representation of the People Act) பிரிவு 8-இன் கீழ், பதவியில் இருக்கும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள்(MPs), சட்டப்பேரவை உறுப்பினர்(MLA), சட்ட மேலவை உறுப்பினர்(MLC) ஆகியோர் மீது கிரிமினல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளித்து, 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு தண்டிக்கப்பட்டால் அவர்களின் பதவி தகுதிநீக்கம் செய்யப்படும் என குறிப்பிடுகிறது.  அதன் அடிப்படையிலே ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கு முன்பு இதேபோன்று யாரெல்லாம் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று பார்க்கலாம்.   முகமது பைசல்  லட்சத்தீவு எம்பியாக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகமது பைசல் தனது உறவினரான முகமது சாஹில் மீது தாக்குதல் நடத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. 5 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் முடிவில் முகமது பைசல் குற்றவாளி என்றும் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் ஜனவரி 11, 2023 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து தனது எம்பி பதவியை அவர் இழந்தார்.  ரஷீத் மசூத் இந்தியாவில் முதன்முதலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஷீத் மசூத் தான். 1990ஆம் ஆண்டு வி.பி.சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக ரஷீத் மசூத் பதவி வகித்தார். அப்போது திரிபுரா மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான மத்திய அரசின் இடங்களில் தகுதியில்லாத மாணவர்கள் சேர்ந்து படிக்க அவர் முறைகேடாக அனுமதி அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கில் அவர் குற்றவாளி என்று கடந்த 2013ஆம் ஆண்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  லாலு பிரசாத் யாதவ்:  ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக இருந்த லாலு பிரசாத் யாதவ் பிகார் முதலமைச்சர், மத்திய அமைச்சர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். பிகார் மாநிலத்தை உலுக்கிய மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2013ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி தீர்ப்பளித்தது. அப்போது பிகாரில் உள்ள சரண் தொகுதி எம்.பி.யாக அவர் இருந்தார். நீதிமன்ற தீர்ப்பையடுத்து மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து லாலு பிரசாத் யாதவ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  ஜெகதீஷ் சர்மா  ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஜெகதீஷ் சர்மாவும் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால், 2013-ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினர் பதவியை அவரும் கைவிட நேரிட்டது. அப்போது பிகாரின் ஜெகனாபாத் தொகுதி எம்.பி ஆக அவர் இருந்தார்.   ஜெயலலிதா  1991-96 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. அப்போது ஜனதா கட்சி தலைவராக இருந்த சுப்ரமணியன் சுவாமி ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கை ஜூன் 14, 1996 அன்று தொடர்ந்தார்.2004ஆம் ஆண்டு இந்த வழக்கு பெங்களூரு தனி நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டது. செப்டம்பர் 27, 2014ல் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி மைக்கல் குன்ஹா ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவித்தார். இதையடுத்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  விக்ரன் சைனி  உத்தர பிரதேசத்தின் முசாஃபர் நகரில் கடந்த 2013ஆம் ஆண்டு இந்துக்கள் – இஸ்லாமியர்களிடையே ஏற்பட்ட கலவரத்தில் 62 பேர் உயிரிழந்தனர். இந்த கலவரம் தொடர்பாக பாஜக எம்எல்ஏ ஆக இருந்த விக்ரம் சைனி மீது வழக்குப் பதியப்பட்டது. எம்எல்ஏ, எம்பி மீதான குற்ற வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது.முசாஃபர் கலவர வழக்கில் விக்ரம் சைனி குற்றவாளி என்றும் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் கடந்த 2022 அக்டோபர் மாதம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இதையடுத்து விக்ரம் சைனியின் தொகுதி காலியாக இருப்பதாக உத்தரப்பிரதேச சட்டமன்றம் நவம்பர் 7, 2022 தேதியிட்ட அறிவிப்பை வெளியிட்டது.  ஆசம் கான்  உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் எம்.எல்.ஏ.வாக இருந்த ஆசம் கான் 2019ல் யோகி ஆதித்யநாத் மற்றும் பிற பாஜக தலைவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது.அக்டோபர் 27, 2022 அன்று, கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நிஷாந்த் மான் , சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஆசம் கான் மீது தொடரப்பட்ட வழக்கில் அவரை குற்றவாளி என தீர்ப்பளித்தார்.அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. அடுத்த நாள், உத்தரப் பிரதேச சட்டமன்றச் செயலகம் ஆசம் கானை சபையில் இருந்து தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தது.  அப்துல்லா ஆசாம்ஆசம் கான் மற்றும் அவரது மகன் அப்துல்லா ஆசாம் ஆகியோர் 2008ஆம் ஆண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளில் கீழ் இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.15 ஆண்டுகள் கழித்து பிப்ரவரி 2023ல் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. இருவரும் குற்றவாளிகள் என்றும் அப்துல்லா ஆசாமுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் மொராதாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, எம்எல்ஏ பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

Related Articles

Back to top button
Close
Close