fbpx
Others

ஜி20 மாநாடு ‘கணக்கு–ஒதுக்கியது ரூ.990 கோடி; செலவானது ரூ.4100 கோடியா…?

ஒதுக்கியது ரூ.990 கோடி; செலவானது ரூ.4100 கோடியா... ஜி20 மாநாடு 'கணக்கு'தான் என்ன?!

டெல்லியில் நடைபெற்ற ஜி 20 மாநாடு வரலாறு படைத்துவிட்டது’ என்று பெருமையுடன் கூறினார் பிரதமர் மோடி. ஆனால், மாநாடு முடிவடைந்த மறுநாளே, மாநாட்டுக்கான செலவு குறித்து பெரும் குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி எழுப்பியிருக்கிறது.

ஜி 20 உச்சி மாநாடு 2023: G20 Dinnerஜி 20 மாநாடு நடத்துவதற்கான செலவுக்கு ரூ.990 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், அதைவிட 300 சதவிகிதம் கூடுதலாக ரூ. 4,100 கோடியை மத்திய பா.ஜ.க செலவிட்டிருக்கிறது என்று குற்றம்சாட்டுகிறது காங்கிரஸ் கட்சி.”கொரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக, பொது நிகழ்ச்சிகளுக்கான செலவுகளை மத்திய பா.ஜ.க அரசு குறைத்திருந்தது. ஆனால், ஜி 20 மாநாட்டுக்கு அளவுக்கு அதிகமாகசெலவுசெய்திருக்கிறார்கள்ஜி20மாநாட்டைஇந்தோனேஷியா நடத்தியபோது,இந்தியாசெலவழித்திருக்கும்பணத்தில்10சதவிகிதம்தான்செலவிட்டது.அதாவது,இந்தோனேஷியாவின்  பாலியில் ஜி 20 மாநாடு நடைபெற்றபோது, அதற்கு வெறும் ரூ.364 கோடி மட்டும் செலவிடப்பட்டது” என்று தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் கூறியிருக்கிறார், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்.

 மேலும், “மக்களுக்கு எரிவாயுவை குறைந்த விலையில் கொடுக்க முடியும். பயிர்கள் சேதமடைந்ததால் துயருற்றிருக்கும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க முடியும்.வெள்ளத்தால்பாதிக்கப்பட்ட இமாச்சல் பிரதேசத்தில் மறுவாழ்வுக்காக போதுமான நிதியை வழங்கியிருக்க முடியும். ஆனால், தங்களுடையஇமேஜைஉயர்த்திக்கொள்வதற்காக 10 மடங்கு நிதியை அதிகமாக ஆட்சியாளர்கள் செலவிட்டிருக்கிறார்கள்” என்று கே.சி.வேணுகோபால் விமர்சித்திருக்கிறார்.திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சகேத் கோகலே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் இதே குற்றச்சாட்டை எழுப்பியிருக்கிறார்கள்.”எவ்வளவுதான்பணத்தை வாரியிறைத்து அழகு வேலைப்பாடுகள் செய்திருந்தாலும், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை மத்திய அரசால் மறைத்துவிட முடியாது” என்று விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், “பொதுமக்களின் பணம் வீணடிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஜி20 மாநாடு நடைபெற்ற பாரத் மண்டபம் வெள்ளநீரால் சூழப்பட்டிருந்ததிலிருந்து புரிந்துகொள்ள முடியும்” என்று கூறுகின்றன.

 ஜி20டெல்லியில் செப்டம்பர் 9-ம் தேதி இரவு கனமழை பெய்தது. அதில், ஜி20 மாநாடு நடந்த பாரத் மண்டபத்தை வெள்ளநீர் சூழ்ந்துகொண்டது. `ரூ. 2,700 கோடி செலவில் அமைக்கப்பட்ட பாரத் மண்டபம் நீச்சல் குளமாக மாறியிருக்கிறது. மோடி அரசின் வெற்று வளர்ச்சியை இது வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது’ என்று `இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் விமர்சித்திருந்தன.இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ட்விட்டர் எக்ஸில் வெளியிட்ட ஒரு பதிவில், ‘இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் உணவு விலை 24 சதவிகிதமும், வேலையின்மை விகிதம் 8 சதவிகிதமும் அதிகரித்திருக்கின்றன. மோடி அரசின் தவறான நிர்வாகம் ஊழலுக்கு வழிவகுத்திருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் ரூ. 13,000 கோடி ஜல் ஜீவன் ஊழல் உட்பட பா.ஜ.க அரசின் பல்வேறு ஊழல்களை சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது. ஜல் ஜீவன் ஊழலை அம்பலப்படுத்தியதற்காக ஒரு தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரி துன்புறுத்தப்படுகிறார்’ என்று குற்றம்சாட்டியிருக்கிறார். எனவே, “பணவீக்கம், வேலையின்மை, மணிப்பூர் பிரச்னை ஆகியவற்றின் மீது இப்போதாவது கவனத்தைத் திருப்புங்கள்” என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியிருக்கிறார்.
ஜி 20 மாநாடு நடைபெற்றபோது, டெல்லியிலுள்ள குடிசைப் பகுதிகளையும், மோசமான கட்டடங்களையும்பச்சை நிற துணியாலும், ஜி 20 பேனர்களாலும் மறைத்திருந்தனர். `மாநாடு முடியும் வரை குடிசைப் பகுதியிலுள்ள மக்கள் வெளியே வரக்கூடாது’ என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது என்று செய்திகள் வெளியாகின. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, `ஏழை மக்களையும் விலங்குகளையும் மத்திய அரசு மறைத்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் யதார்த்தத்தை விருந்தினர்களிடமிருந்து மறைக்க வேண்டிய அவசியமில்லை’ என்று கூறியிருந்தார். இப்போது, குடிசைப்பகுதிகளையும் மோசமான கட்டடங்களையும் மறைப்பதற்கும் சேர்த்துத்தான் ரூ.4,100 கோடி செலவிடப்பட்டதா என்று கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.  அதிகமாக செலவு செய்திருக்கிறார்கள் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்திருக்கிறது. 300 சதவிகிதம் அதிகமாக செலவழித்திருக்கிறார் என்று குறிப்பிடப்படுவதை, அது, நிரந்தர சொத்து உருவாக்கத்துக்காக செலவிடப்பட்ட தொகை என்றும், அதை நிகழ்ச்சிகான செலவாகக் கருதக் கூடாது என்றும் மத்திய அரசு கூறியிருக்கிறது. மோடி – இம்மனுவேல் மாக்ரோன்இது தொடர்பாக மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி பகிர்ந்துள்ள ஆவணத்தில், குறிப்பிடப்பட்டுள்ள ரூ.4,110.75 கோடியில், இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் (ஐடிபிஓ) கீழ் ரூ.3,600 கோடி செலவினம் பட்டியலிடப்பட்டுள்ளது, இது மொத்தத் தொகையில் கிட்டத்தட்ட 88 சதவீதமாகும். இந்த ரூ. 3,600 கோடி உண்மையில் பிரகதி மைதானத்தில் ITPO வளாகத்தை நிர்மாணிப்பதற்கான செலவாகும். பின்னர் அது அதிகாரப்பூர்வமாக, G20 உச்சிமாநாட்டின் அதிகாரப்பூர்வ இடமான பாரத் மண்டபம் என மறுபெயரிடப்பட்டது. நிரந்தர உள்கட்டமைப்பான பாரத மண்டபம் கட்டுவதற்கான செலவு, ஜி20 பட்ஜெட் ஒதுக்கீட்டில் இருந்து வேறுபட்டது. இந்த அதி நவீன வளாகத்தின் மறுவடிவமைப்பு மற்றும் மறுசீரமைப்பு 2017 இல் ரூ 2,254 கோடி பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டது.” என்கிறார்மேலும் ஜி20 மாநாட்டின் வெற்றியை ஏற்க மனமில்லாமல் எதிர்க்கட்சிகள் போலியாக குற்றம் சாட்டுவதாக தெரிவிக்கிறார்கள் பாஜக-வினர்.

Related Articles

Back to top button
Close
Close