ஜிகே மணிக்கு அன்புமணி ராமதாஸ் தரப்பு நோட்டீஸ்….
கடந்த சில மாதங்களாகவே பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையே மோதல் நிலவுகிறது. நான் தான் பாமக என நிறுவனர் ராமதாஸ் கூறி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் தங்களைத் தான் அங்கீகரித்துள்ளதாக கூறுகிறார் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்.இந்த நிலையில் தந்தை மகனுக்கு இடையேயான மோதலுக்கு ஜிகே மணி தான் காரணம் எனவும் தங்களுக்குள் பிரச்சினையை ஏற்படுத்துவதாக சமீபத்தில் பேசியிருந்தார் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான அன்புமணிராமதாஸ்.இதற்கிடையே சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜி.கே மணி தந்தை மகனுக்கு இடையேயான பிரச்சனைக்கு தான் காரணம் இல்லை எனவும், யாரெல்லாம் துரோகிகள் என அன்புமணி நினைக்கிறாரோ அவர்களெல்லாம் கட்சியை விட்டு விலக தயார் என்றும், தனது எம்எல்ஏ பதவியை கூட ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக பேசியிருந்தார்.இந்த நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வரும் ஜிகே மணியை ஏன் கட்சியை விட்டு நீக்கக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தரப்பு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதுதொடர்பாக பாமக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. ஜி.கே.மணி
அவர்கள் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார்.அவரது அண்மைக்காலசெயல்பாடுகள்எல்லைக்கடந்தவையாகஇருப்பதால், அதற்காக அவர் மீது கட்சியின் அமைப்பு விதி 30இன்படிநடவடிக்கை எடுப்பது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்குநடவடிக்கைக் குழு சென்னையில் நேற்று(17.12.2025)புதன்கிழமைகூடிவிவாதித்தது. அப்போது ஜி.கே.மணி அவர்களின் கீழ்க்கண்ட இரு கட்சி விரோத நடவடிக்கைகள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்க தீர்மானிக்கப்பட்டது.1. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளையும், அவதூறுகளையும் கூறி, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த திசம்பர் 6ஆம் தேதி தில்லி காவல்துறை துணை ஆணையரிடம் புகார் அளித்தது மற்றும் நேர்காணல் அளித்தது. 2. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் கடந்த திசம்பர் 15&ஆம் நாள் சென்னையில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தது. மேற்கண்ட இரு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி ஜி.கே.மணி அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது.” எனக் கூறப்பட்டுள்ளது.