fbpx
Others

சோமையம்பாளையம் ஊர் மக்கள் எதிர்ப்பு–ஆட்சியரிடம் மனு..?

சோமையம்பாளையம் ஊராட்சியை கோவை மாநகராட்சியுடன் இணைக்க ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்தனர் !

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சோமையம் பாளையம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பது என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டது.இது குறித்து ஊர் பொதுமக்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, சோமையம்பாளையம் ஊராட்சியில் பெரும்பான்மையான கிராமங்கள் 60 சதவீதம் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்க்கும் விவசாய தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. இதன் காரணமாக 100 நாள் வேலைத் திட்டத்தின் மூலம் விவசாய தொழிலாளர்கள் மற்றும் விவசாய நிலம் வைத்துள்ள சிறு குறு விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். எங்களது ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதால் 100 நாள்வேலைத் திட்டத்தை நம்பியுள்ள ஏழை விவசாய தொழிலாளர்கள் மற்றும் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் குடும்பங்கள் வேலை இல்லாமல் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும், மத்திய அரசு நிதிகள் கிடைக்காமல் கிராமத்தில் அடிப்படை வசதி பணிகள், வீடு கட்டும் திட்டங்கள் சுகாதார திட்டங்கள் மகளிர் மற்றும் குழந்தைகள் நல திட்டங்கள் செயல்படாமல் போகும். கிராம சபைகளை நடத்துவது தடைபடும்.சாமான்ய மக்கள், விவசாய தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் அதிகளவில் உள்ள எங்கள் ஊராட்சியை கோவை மாநகராட்சியுடன் இணைக்கும் பொழுது சொத்துவரி, குடிநீர் வரி.பல மடங்கு உயர்வதுடன் கூடுதலாக காலியிட வரி மற்றும் குப்பை வரிகள் விதிக்கப்பட்டு மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும்.தனிமனை வரன்முறை கட்டணம், வீடு கட்ட அனுமதி கட்டணம் புதிய குடிநீர் இணைப்பு போன்றவை பல மடங்கு உயரும் நிலை ஏற்படும். அரசு மானியங்களில் வீடு கட்டும் திட்டம் இல்லாமல் போகும்.சோமையம்பாளையம் ஊராட்சியை கோவை மாநகராட்சியுடன் இணைக்காமல் ஊராட்சியாகவே செயல்பட வேண்டும் என கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். ஊராட்சி மன்றத்தையும் வலியுறுத்தி ஊராட்சி மன்றமும் பொதுமக்களாகிய எங்கள் நலன் கருதி கோவை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என்றும் ஊராட்சியாகவே செயல்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. எனவே ஊராட்சியின் பெரும்பான்மை மக்களின் விருப்பமாக உள்ளதாகவும், கோவை மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனுஅளித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close