செய்தி துளிகள்…. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
திருப்பத்தூரை அடுத்த குனிச்சி கூட்ரோடு பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. நடைபாதை மற்றும் வாகனங்களில் செல்வோரை விரட்டிச்
சென்று கடிக்க பாய்கின்றன. நாய்கள் தொல்லையால் பள்ளி மாணவர்கள், முதியவர்கள், பெண்கள்அச்சத்தில் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூர் மாவட்டம், ராயம்புரம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட காவேரிப்பாளையம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் கால்நடைகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள ஆடுகளை இப்பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் கடித்துக் குதறி வருகிறது.இதனால் ஆடுகள் உயிரிழந்து விடுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டுவருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
காட்பாடி தாலுகா பொன்னை புதிய மேம்பாலம், ஆற்றங்கரை ஓரம், சந்தைமேடு, குவித்து வைத்திருக்கும் குப்பை மேடுகள், குடிநீரேற்றும் ஆழ்துளைகிணறுகள் இருக்கும் பகுதிகளில் ஏராளமான பன்றிகள் சுற்றித் திரிகின்றன. இதனால் அந்தப் பகுதிகளில் சுகாதாரச்
சீர்கேடு ஏற்படுகிறது. பன்றிகளை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?