fbpx
Others

செயற்கைக்கோள்களில்சிக்னல் துண்டிப்பு!! இஸ்ரோ தகவல்

 விண்ணுக்கு அனுப்பப்பட்ட 2 செயற்கைக்கோள்களில்சிக்னல் துண்டிப்பு!!

அமராவதி: எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட  2 செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. EOS-02, AzaadiSAT ஆகிய செயற்கைக் கோள்களை காலையில்  எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியுள்ளது. செயற்கைக் கோள்களில் இருந்து சிக்னல்களை பெற தீவிரமாக முயற்சித்து வருகிறோம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் தெரிவித்துள்ளார்.

விண்ணில் ஏவப்பட்டதில் இருந்து முதல் 2-வது, 3-வது நிலைகளை ராக்கெட் வெற்றிகரமாக கடந்ததாகவும் ஆனால் இறுதி கட்டத்தில் செயற்கைகோள்களில் இருந்து சிக்னல் வரவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது.  இரண்டு செயற்கைக்கோள்கள், அதை சுமந்து சென்ற ராக்கெட்டில் இருந்து சிக்னல் வரவில்லை என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

மேலும் செயற்கைக்கோள்கள், ராக்கெட்டை மீண்டும் தொடர்புகொள்ளும் முயற்சிகளும், சிக்னலை மீண்டும் உறுதி செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. விண்ணில் ஏவப்பட்ட SSLV ராக்கெட் மற்றும் செயற்கைகோள்களின் நிலை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close