fbpx
Others

செப்டம்பர்-2 பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் மங்களூரு வருகை

வருகிற 2-ந் தேதி, மங்களூரு வருகை தரும் பிரதமர் மோடி ரூ.3,800 கோடியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மங்களூரு: வருகிற 2-ந் தேதி, மங்களூரு வருகை தரும்பிரதமர் மோடி 2-ந் தேதி மங்களூரு வருகை பிரதமர் மோடி ரூ.3,800 கோடியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவுக்கு வருகிற 2-ந்தேதி ஒருநாள் சுற்றுப்பயணமாக வருகிறார். 1-ந்தேதி கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது கொச்சியில் துறைமுகத்திற்கு செல்லும் பிரதமர் மோடி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் விமான தாங்கி கப்பலை அர்ப்பணிக்கிறார். அதையடுத்து கொச்சியில் இருந்து மங்களூருவுக்கு தனி விமானத்தில் வருகிறார். கர்நாடகம் வரும் அவர் மங்களூரு துறைமுக பகுதியில் ரூ.3,800 கோடி மதிப்பிலான தொழிற்மயமாக்கும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- புதிய மங்களூரு துறைமுகத்தில் சரக்குகள் கையாளும் திறனை மேம்படுத்தும் நோக்கில் ரூ.280 கோடி செலவில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் துறைமுகத்தின் கையாளும் சரக்குகள் விரைவாகவும், குறித்த நேரத்திலும் முடிக்கப்படும்.மேலும் கையாளும் திறன் 35 சதவீதம் அதிகரிக்கும். இதனால் நாட்டின் தொழில் சுற்றுச்சூழலுக்கு ஊக்கம் அளிக்கப்படும். இந்த திடத்தின் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்துவிட்டது. இதன்மூலம் 4.2 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்படும். வருகிற 2025-ம் ஆண்டிற்குள் சரக்குகள் கையாளும் திறன் 6 மில்லியன் டன்னாக அதிகரிக்கும்.  கடல் நீர் சுத்திகரிப்பு ஆலை அன்றை தினம் ரூ.1,000 கோடி மதிப்பிலான 5 திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும் சமையல் எரிவாயு சேமிப்பு முணைய வசதி மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட சமையல் எரிவாயு மற்றும் எரிபொருட்கள் கையாளப்பட உள்ளது. சுமார் 45 ஆயிரம் டன் எரிப்பொருட்கள், சமையல் எரிவாயு ஆகியவை திறம்பட கையாளப்படும். மேலும், இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் சமையல் எரிவாயு இறக்குமதி செய்யும் முன்னணி துறைமுகமாக புதிய மங்களூரு உருமாறும். மீன்பிடி துறைமுக பகுதியான குலாயில் சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு, சேமிப்பு கிடங்குகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இதன் மூலம் பாதுகாப்பான முறையில் மீன்கள் சேமிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இதேபோல் மங்களூரு சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தின் கீழ் மாசற்ற சுற்றுச்சூழலை உருவாக்கு நோக்கில் ரூ.1,830 கோடி செலவில் குறைந்த சல்பர் கலக்கப்படும் எரிபொருட்கள் உற்பத்தி மையம் அமைக்கப்படும். மேலும் கடல் நீரை சுத்திகரிப்பு செய்து குடிநீராக மாற்றம் ஆலைகள் அமைப்பதற்காக ரூ.680 கோடியில் திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் குடிநீர் தேவையை ஈடுகட்ட முடியும்.  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து மங்களூரு அருகே கூலூர் பகுதியில் உள்ள கோல்ட் பிஞ்ச் சிட்டி மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்தும் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேரத்தில் திடீர் மாற்றம் இந்த நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் மங்களூரு நிகழ்ச்சிகளின் நேரம் திடீரென மாற்றப்பட்டு உள்ளதாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதாவது வருகிற 2-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற இருந்த நிகழ்ச்சிகள், மதியம் 1 மணிக்கே தொடங்குகிறது. அதாவது மங்களூரு விமான நிலையத்திற்கு தனி விமானம் முலம் பிரதமர் மோடி, மதியம் 1 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து காரில் மதியம் 1.30 மணிக்கு புதிய மங்களூரு துறைமுகத்திற்கு செல்லும் மோடி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதையடுத்து பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிவிட்டு பிரதமர் மோடி, மதியம் 3 மணிக்கு தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். இந்த நேர மாற்றத்திற்கு காரணம் எதுவும் கூறப்படவில்லை. பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள 1,500-க்கும் மேற்பட்ட பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

Related Articles

Back to top button
Close
Close