fbpx
Others

சென்னை மாநகராட்சி ஆணையருக்குடெங்கு பாதிப்பு….?.

 

மிழக ஐஏஎஸ் அதிகாரிகளிலேயே மக்களுக்கு நன்கு அறிமுகமான ஒருவர் ராதாகிருஷ்ணன், சுனாமி பாதிப்பு, கும்பகோனம் தீ விபத்து உள்ளிட்ட நேரங்களில் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்றி மக்களிடம் நல்ல பெயரை எடுத்தவர், மேலும் உலகத்தையே கொரோனா பாதிப்பு ஆட்கொண்ட நேரத்தில் தமிழகத்திலும் விட்டு வைக்கவில்லை.அந்த நேரத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்த தீவிரமாக உழைத்தவர்களில் ராதாகிருஷ்ணன் முக்கியமானவர். அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை செயலாளராக இருந்தவர், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் சகாதாரத்துறை செயலாளராகவே தொடர்ந்தார்.  இந்தநிலையில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்ட போது சென்னை மாநாகராட்சி ஆணையராக ஜெ.ராதாகிருஷ்ணன் இடம் மாறுதல் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தனக்கு வழங்கப்பட்ட சென்னை மாநாகராட்சி ஆணையர் பணியை களத்தில் இறங்கி தீவிரப்படுத்தினார். தற்போது டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் பரவி வரும் நிலையில், சென்னையிலும் அதன் தாக்கம் அதிகரித்தது. இதனையடுத்து அந்த பகுதிகளுக்கு நேரடியாக சென்று டெங்கு கட்டுப்பாடு குறித்து ஆலோசனை வழங்கி வந்தார்.இந்தநிலையில் அவருக்கும் கடந்த சில தினங்களாக காய்ச்சல் அதிகரித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பரிசோதனை மேற்கொண்டார். அதில் டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

. இதனையடுத்து கடந்த ஒரு வார காலமாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் வீட்டில் ராதாகிருஷ்ணன் ஓய்வெடுத்து வருகிறார். வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வரும் ராதாகிருஷ்ணனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் தனது பணிக்கு திரும்புவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close