fbpx
Others

சென்னை—தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து ரூ.500-க்கு விற்பனை…

தமிழகம் முழுவதும் தாய்ப்பால் விற்பனை குறித்து தீவிர கண்காணிப்பு - புகார் எண் அறிவிப்புசென்னை மாதவரம் தபால்பெட்டி பகுதியை சேர்ந்தவர் முத்தையா. இவர் மாதவரம் கே.கே.ஆர். கார்டன் தெருவில் மருந்து கடை நடத்தி வந்தார். இவர், தன்னுடைய கடையில்
30 மில்லி லிட்டர் தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து ரூ.500-க்கு விற்பனை செய்வதாக உணவுபாதுகாப்புத்துறைஅதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில்நேற்றுமுன்தினம் இவரது கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.PauseUnmute Loaded: 4.68% Fullscreenஅப்போது,பாட்டிலில்அடைத்துவைத்து தாய்ப்பால் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடைக்கு உணவு
பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். புரதச்சத்து பவுடர் விற்பதற்காக வழங்கப்பட்ட உரிமத்தை வைத்துதாய்ப்பால் விற்பனை செய்து வந்ததும் அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.இந்த நிலையில், தமிழகம் முழுவதும் தாய்ப்பால் விற்பனை குறித்து தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதேபோல, சென்னையில் தாய்ப்பால் விற்பனையை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தாய்ப்பால் விற்பனை குறித்து 94440 42322  என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

Related Articles

Back to top button
Close
Close