fbpx
Others

சென்னை ஐசிஎஃப்-ல் தயாராகும் 50-வது வந்தே பாரத் ரயில்.

 சென்னையில் உள்ள ஐசிஎஃப் ஆலையில் நாட்டின் 50-வது வந்தேபாரத் ரயில் தயாரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இம்மாத இறுதியில் இந்த ரயிலைத்தயாரித்து, ரயில்வே வாரியத்துக்கு அனுப்ப ஐசிஎஃப் திட்டமிட்டுள்ளது.2019-ல் வந்தே பாரத் ரயில்சேவையை டெல்லி-வாரணாசி இடையே பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். தொடர்ந்து, டெல்லி-காத்ரா, காந்திநகர்-மும்பை என பல்வேறு வழித்தடங்களில் 45-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.தெற்கு ரயில்வேயில் சென்னை-கோவை, சென்னை-மைசூரு, சென்னை-விஜயவாடா, சென்னை- திருநெல்வேலி. திருவனந்தபுரம்-காசர்கோடு உள்ளிட்ட வழித் தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றுக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது.

இதையடுத்து, அதிக அளவில் வந்தே பாரத் ரயிலை தயாரித்து வழங்க ஐசிஎஃப்-க்கு ரயில்வே வாரியம் அறிவுறுத்தியது. இதையடுத்து, வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், சென்னை ஐசிஎஃப் ஆலையில் 50-வது வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி நடைபெறுகிறது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. எனவே,சென்னை ஐசிஎஃப் 2023-24-ம் நிதியாண்டில் 736 வந்தே பாரத் ரயில்பெட்டிகள் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. வாரத்துக்கு 2 அல்லது3 வந்தே பாரத் ரயில்களை தயாரித்து வழங்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. தலா 16 பெட்டிகளைக் கொண்ட 46 வந்தே பாரத் ரயில்கள்அல்லது தலா 8 பெட்டிகள் கொண்ட92 வந்தே பாரத் ரயில்களைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கிடையில், சென்னை ஐசிஎஃப் ஆலையில் 50-வது வந்தே பாரத் ரயில் தயாரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இம்மாத இறுதிக்குள் இந்த ரயிலை தயாரித்து வழங்குவோம். இவ்வாறு ரயில்வே அதிகாரிகள். கூறினர்.

Related Articles

Back to top button
Close
Close