fbpx
Others

சென்னை ஐகோர்ட்டுஉத்தரவு—?

சென்னை, அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில், சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி சலசலப்புடன் நடைபெற்றது. இதனிடையே,23 தீர்மானங்களை தவிர மற்ற எந்த தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால்,ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாக மேடையில் தெரிவித்தார். அதன்பின்னர்,அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில்,அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் தொடர்ந்த வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட்டு உத்தரவை மீறி அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டதாகவும்,எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ்,முன்னாள் அமைச்சர்கள்சிவிசண்முகம்,ஜெயக்குமார் ,திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உத்தரவை மீறியதாகவும் சண்முகம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கில் தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என்ற இடைக்கால உத்தரவு ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவுக்கு மட்டும் பொருந்தும். அதன் பின் நடக்கும் பொதுக்குழுக்களுக்கு அல்ல. அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கோர முடியாது. ஜூலை 11 ந்தேதி அதி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி தனி நீதிபதியை அணுகும் படி ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு சென்னை ஐகோர்ட்டு கூறி உள்ளது. மேலும் வழக்கை ஒத்திவைக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு கேட்டுக்கொண்டதற்கு இணங்க நீதிபதிகள் வழக்கை 7 ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக வரும் 7ம் தேதி எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close