fbpx
Others

செந்தில்பாலாஜி– சென்னையில் தடையின்றி சீராக மின்சாரம்.

‘சென்னையில் அதிகரித்த 3 ஆயிரத்து 991 மெகாவாட் மின்சாரத்தை தட்டுப்பாடு இன்றி வினியோகம் செய்து மின்சார வாரியம் சாதனைசென்னையில் சீரான தடையில்லா மின்சாரம் விநியோகம் - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் படைத்துள்ளது’ என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.  வாரியம் அறிவிப்பு தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வீடுகளில் மின்விசிறி, ஏ.சி. மற்றும் ஏர்கூலர் போன்ற மின்சார சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.  எனவே மின்சாரத்தின் தேவையும் அதிகரித்து வருகிறது. அதன்படி அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் தயார் நிலையில் முன்னேற்பாடுகளை செய்து தட்டுப்பாடு இன்றி மின்சார வினியோகம் செய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக மின்நுகர்வு 3 ஆயிரத்து 991 மெகாவாட் (84 ஆயிரத்து 51 மில்லியன் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- சென்னையில் கடந்த 15-ந்தேதி மின்சாரத்தின் தேவை 3 ஆயிரத்து 991 மெகாவாட் ஆகும். இந்த தேவை எந்த மின்சார தடையும் இன்றி வினியோகம் செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இதற்கு முந்தைய உச்சபட்ச தேவை என்பது கடந்த மாதம் 20-ந்தேதி 3 ஆயிரத்து 778 மெகாவாட் ஆகும். சென்னையில் நேற்று முன்தினம் மின்சார நுகர்வு 84 ஆயிரத்து 51 மில்லியன் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டது. இதற்கு முன்பு கடந்த மாதம் 24-ந்தேதி 84 ஆயிரத்து 23 மில்லியன் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது’ என்று கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close