fbpx
Others

செங்குன்றம் சூப்பர் மார்க்கெட்டில் ரூ.40 லட்சம் கையாடல்! ஊழியர் கைது !!

செங்குன்றம், ஜூலை 23 செங்குன்றத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன். செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே ஜி.என்.டி சாலையில் சொந்தமாக சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகின்றார்.இவரது, கடையில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் சென்னைகே.கேநகர்,ஜீவானந்தம்சாலையைசேர்ந்தகணேஷ்குமார்(40) என்பவர், கடந்த 6ஆண்டுகளாகவிற்பனையாளராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில், சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் ரவிச்சந்திரன் நேற்று முன்தினம் தற்செயலாக சி.சி.டிவி கேமராவை பார்த்த போது, கணேஷ்குமார் பணத்தை எடுத்து அருகே வைத்திருந்த பிளாஸ்டிக் பக்கெட்டில் போடும் காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.உடனே கணக்கு வழக்குகளை ஆய்வுசெய்தார்.அதில் சுமார் 40 இலட்சம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.இதுகுறித்து ரவிச்சந்திரன் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.செங்குன்றம் காவல் சரக உதவி ஆணையர். ராஜாராபர்ட் உத்தரவின்பேரில், வழக்குப்பதிவு செய்த செங்குன்றம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர். லதா மற்றும் காவல்துறையினர் சூப்பர் மார்கெட்டில் ரூ.40 லட்சம் கையாடலில் ஈடுபட்ட கணேஷ் குமாரை கைது செய்து பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Articles

Back to top button
Close
Close