செங்குன்றம் கே.பி.சி. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு
செங்குன்றம் கே.பி.சி. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சிநடந்தது!
செங்குன்றம் கே. பி. சி. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2002 ஆம் ஆண்டு மற்றும் 2004 ஆம் ஆண்டு படித்த மாணவிகள் 23 ஆண்டுகள் கழித்து நேரில் சந்திக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது மாணவி சுஜிதா இது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் சவீதா வெற்றி செல்வி அனைவரையும் வரவேற்றார் சிறப்பு விருந்தினராக டாக்டர். என். எம். டி. கோபால் மூத்த பத்திரிகையாளர் ஆர். முருகக்கனி கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் முன்னாள் தலைமை ஆசிரியர் பாத்திமா மற்றும் ஆசிரியர்கள் பாக்கியம், காஞ்சனா, ஷோபனா, உமையாள் பஷீரா, நளினி, லிங்கேஸ்வரன், ஜான்சி பானுமதி, சண்முகப்பிரியா பத்மாவதி, ராஜகுமாரி, சாந்தாமணி, கருணாகரன், கிளாடி சுகுணா, ஜெகதாம்பாள் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.ஆசிரியர்கள்சார்பில் தாங்கள் பணிபுரிந்த காலத்தில் பள்ளிவளர்ச்சிக்குஅயராது பாடுபட்ட முன்னள் பேரூராட்சி
தலைவர். மா.துரைசாமிக்குபாராட்டு தெரிவிக்க ப்பட்டது. மேலும் மாணவிகளுடன்
நடந்த பல சுவையான நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்தனர். மாணவிகள் சிலர் தங்கள் குழந்தைகளோடு கலந்து கொண்டார்கள். மாணவிகளுக்கு அமுதா முருககனி ஃபேமி நைன் நாப்கின் சிறப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம்வழங்கினார்.
தாங்கள் படித்த பள்ளிக்கு மாணவிகள் சார்பில் இரும்பு பீரோவை வழங்கினர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக சுஜிதா, சவிதா சுதா, ரேணுகா, பாரதி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.

