fbpx
Others

செங்குன்றத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு விழா

ஆவடி காவல் ஆணையரகம் செங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய திறப்பு விழா திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர். எம்.பிரதாப் தலைமையில் நடைபெற்றது.செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர். கே.எஸ்.பாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். கூடுதல் ஆணையர் பவானி ஈஸ்வரி, மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகர், உதவி ஆணையர்.ராஜாராபர்ட்ஆகியோர்முன்னிலைவகித்தனர்.
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர். ஆவடி சா.மு.நாசர், ஆவடி மாநகர காவல் ஆணையர். கே.சங்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு செங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை திறந்துவைத்தனர் காவல் உதவி ஆணையர்கள். சங்கர், வீரக்குமார், மகிமை வீரன், பிராங்கிளின் ரூபன், ஆய்வாளர்கள். செங்குன்றம் புருஷோத்தமன், சோழவரம் கிளாஸ்டின் டேவிட், ராஜ்குமார், செங்குன்றம் லதா மகேஷ்வரி, அனைத்து காவல் நிலைய ஆய்வாளர். பரணி, உதவி ஆய்வாளர்கள் பாஸ்கர், ஆண்டிலின் ரமேஷ், ஜனார்த்தனன், ரமேஷ் மற்றும் நாரவாரிகுப்பம் பேரூராட்சி தலைவர். தமிழரசி குமார், பேரூராட்சி செயலர். யமுனா, பேரூராட்சி துணைத்தலைவர். ஆர்.விப்ரநாராயணன், மின்வாரிய அதிகாரிகள் சௌந்தரராஜன், விஜயகுமார், கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close