சூப்பர் பிளான்… புரியாதகூட்டணி…?
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில், பாஜக, அதிமுக கொடிகளுக்கு மத்தியில் தவெக கொடியும் பறந்தது. தவெகவின் கொடியை பார்த்த எடப்பாடி பழனிசாமி ,”அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் பாருங்கள், கொடி பறக்கிறது! பிள்ளையார் சுழி போட்டு விட்டார்கள்” என்றார். இது கூட்டணி அமைப்பதற்கான சிக்னல் என அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், விஜய் தரப்பில் அமைதி மட்டுமே காட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரவீந்திரன் துரைசாமி தன் கருத்தை பேட்டியில் தெரிவித்துள்ளார்.Tamil Niram என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, விஜய் தனியாக தேர்தலில் நின்றால்தான் எடப்பாடி பழனிசாமிக்கு பாதிப்பு வரும்..அதிமுகவுடன் இணைந்தால் பாதிப்பு குறைவுதான்,. கருப்பு எம்ஜிஆர்என்றுஅன்றுவிஜயகாந்த்துக்குவிழுந்ததுஇரட்டைஇலைக்குவிழுந்தவாக்குகள்தான் எம்ஜிஆர் ஆட்சிஎன்றுகமலஹாசனுக்குவிழுந்ததும்,இரட்டைஇலைக்குவிழுந்தவாக்குகள்தான். சீமானுக்கு 7.1 வாக்குகள் விழுந்ததும் இரட்டை இலைக்கு விழுந்த வாக்குகளே,.திராவிட இயக்கம் என்று ஸ்டாலினுக்கு போனதும் இரட்டை இலைக்கு விழுந்த வாக்குகள்தான்.. பன்னீர், டிடிவி, அண்ணாமலைக்கு என்று என்டிஏவுக்கு விழுந்ததும் இரட்டை இலைக்கு விழுந்தவாக்குகள்தான்..அந்தவகையில்விஜய்கட்சிஆரம்பித்தால்இரட்டைஇலைக்குவிழுந்த பிறமொழிஒட்டர்,போயர்,அருந்ததியர்போன்றசகோதரர்களின்ஓட்டுக்களும், பழைய இரட்டை இலை ஓட்டுக்களும் அனைத்தும் விஜய் பக்கம் வரும்..அருந்ததியர் ஓட்டுக்கள் எதுவும் சீமானுக்கும் போகாது. எனவே, விஜய் தனியாக நின்று, 200 அல்லது கோடி ரூபாய்
செலவழித்து, வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கோடி ரூபாய் தந்து, பாசிட்டிவ்வாக களத்தில் விஜய் நின்றால், எடப்பாடி பழனிசாமிக்கு கண்டிப்பாக சிக்கல் வரும்..தனித்துவிஜய்நின்றால்,அதிமுகஓட்டுக்கள்அடிவாங்கிவிடும்..இந்தடேமேஜைகட்டுப்படுத்துவதற்காகவே, விஜய்க்கு எடப்பாடி நிச்சயம் சீட் தருவார்.அப்படி கேட்ட சீட்டை பெற்றுக்கொண்டு, எடப்பாடிதான் முதலமைச்சர் வேட்பாளர் என்றால், அது விஜய்க்கு பலவீனத்தையே தரும். பாஜக விஷயத்தில் எடப்பாடியை தவறாக கணித்து விட முடியாது.. 2019-ல் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி சொன்னதுமே, பாஜக தலைவர்கள் மயங்கி விழாத குறைக்கு ஆளானார்கள்.. பிறகு நீங்க கொடுக்கற சீட்டை கொடுங்கன்னு பாஜக கேட்டாங்க.. ஆனால் 5 சீட்டுக்குள்ளேயே பாஜகவை நிறுத்திவிட்டார் எடப்பாடி பழனிசாமி..இப்போதும் விஜய்யை காட்டி பாஜகவை மிரட்டி கொண்டிருக்கிறார்.. பாஜகவுடன் சேர்ந்து கொண்டு விஜய்யை மிரட்டுகிறார்.. ஆனால், பாஜக எதுவுமே செய்யவில்லை. பாஜகதான் அரசியல் செய்கிறது என்று சொல்வதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட பிம்பம்தான். இதுவரை பாஜக செய்த ஒரே விஷயம், சசிகலாவை தவிர்த்தது மட்டுமே.. அதேசமயம் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இதுவரை ஒரு துரும்பைகூட செய்ததில்லை. அண்ணாமலை மட்டும் 11.4 சதவீதம் ஓட்டுக்களை எடுத்தார். எனவே வரப்போகும் தேர்தலில் பாஜகவின் கணிப்பு என்ன என்பது இனிமேல்தான் தெரிய வரும்” என்றார்.