fbpx
Others

சுதந்திரத்திற்கு புரட்சி கவிதைகளால் வித்திட்டவர் பாரதி

புரட்சி கவிதை அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கூடம், ஷூபான்ஷிங் கலாசார ஆய்வு மையத்துடன் இணைந்து மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவாக பாரதி விழா- 2022 நிகழ்ச்சி இன்று தொடங்கியது. விழாவில் பாஸ்கர் என்ற தட்சணாமூர்த்தி எம்.எல்.ஏ. வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசியதாவது:- எந்த கல்வி கூடத்தில் தரம்வாய்ந்த சிறந்த ஆசிரியர்கள் இருக்கிறார்களோ, அங்கு படிக்கும் மாணவர்களும் திறமையானவர்களாக இருக்கிறார்கள். சீனாவில் இருந்து வந்து புதுச்சேரியில் தங்கிபுரட்சி கவிதைகளால் சுதந்திரத்திற்கு வித்திட்டவர் பாரதியார் அரவிந்தரோடு 22 ஆண்டுகள் இருந்து  லூ பிரான்ஸ் எங் என்ற ஓவியர் வரைந்த ஓவியம் இன்னும் அரவிந்தர் ஆசிரமத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.பாரதியார், அரவிந்தர், லூ பிரான்ஸ் எங் ஆகிய 3 பேரும் அன்றாடம் ஓரிடத்தில் முக்கோண இணைப்பிலே சந்தித்து வேதாந்தங்களை பரிமாறிக் கொண்டவர்கள். பாரதி வாழ்ந்த 10 ஆண்டுகளில் அவர் எழுதிய கவிதைகள் செய்த சாதனைகள் பல. முரண்பட்ட காலத்தில் வாழ்ந்த பாரதியார் புரட்சி கவிதைகளால் சுதந்திரத்திற்கு வித்திட்டவர். இவ்வாறு அவர் கூறினார். பெண்களை போற்றும் ரங்கசாமி விழாவில் அமைச்சர் சந்திர பிரியங்கா பேசுகையில் ‘இந்த ஆட்சியில் துறை அமைச்சர்களுக்கு பல்வேறு இலாகா ஒதுக்கினாலும் நாங்கள் பிரித்து பார்க்கவில்லை. பிரிந்து செயல்படவில்லை. எங்களுடைய நோக்கம் புதுச்சேரி மாநிலம் முன்னேற வேண்டும் என்பதே. அதனால் தான் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அமைச்சர்கள் சேர்ந்து கலந்து கொள்கிறோம். பெண்மையை போற்றி வாழும் பாரதியாராகவே முதல்-அமைச்சர் ரங்கசாமியை பார்க்கிறேன். அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் பயின்ற 10 மாணவர்களுக்கு வெளி மாநிலத்தில் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது பெருமையளிக்கிறது’ என்றார். விழாவையொட்டி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக பாரதியார் பல்கலைக்கூட முதல்வர் (பொறுப்பு) போஸ் அனைவரையும் வரவேற்றார். இதற்கான ஏற்பாடுகளை ஷூபான்ஷங் கலாசார ஆய்வு மையத்தின் மேலாளர் ராதா சீனிவாச கோபாலன் செய்திருந்தார்.

Related Articles

Back to top button
Close
Close