fbpx
Others

சீரழிந்துகிடக்கும் தேனி சிவராம்நகர் வள்ளி நகர் சாலை..சீர்படுமா..?

   தேனிசிவராம்நகர்வள்ளி நகர் சாலை வலது பக்கத்தில் மின் வாரிய பணியாளர்களால் வெட்டப்பட்ட மரக்கிளைகள் சாலையில் குப்பையாக கிடக்கிறது…. இந்த கழிவுகளை அகற்ற நகராட்சி தூய்மை பணியாளர்கள் யாரும் வருவதில்லை…. மேலும் இந்த வழியில் சென்று கொண்டிருந்த கழிவுநீர் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு குப்பைக் கழிவுகளால் இந்த கழிவுநீர் சாக்கடை அடைபட்டு உள்ளது. இது மேலும் அடைபட்டால் யாரும் இந்த சாலை வழியாக நடந்து செல்ல முடியாதபடி சாலையில் கழிவுநீர் செல்ல ஆரம்பிக்கும் முன் இவற்றை உடனடியாக அகற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்? உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா என பொறுத்து இருந்து பார்ப்போம்!!!………………………………. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்பு துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close