fbpx
Others

சி.ஏ.ஜி. அறிக்கையில் ஒன்றிய அரசின் 7 மெகா ஊழல்கள் அம்பலம்.

சி.ஏ.ஜி. அறிக்கையால் ஒன்றிய அரசின் 7 விதமான ஊழல்கள் அம்பலமாகி இருப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை தியாகராய நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மோடி அரசின் 7 லட்சம் கோடி ரூபாய் ஊழலை அம்பலப்படுத்திய சி.ஏ.ஜி. அறிக்கை மற்றும் வெறுப்பு அரசியல் குறித்து கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மோடி ஆட்சியில் சொந்த நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக கூறினார்.   ஒன்றிய அரசின் பாரத்மாலா, சுங்கச்சாவடி கட்டணங்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டம், விமான வடிவமைப்பு திட்டம் உள்ளிட்ட 7 திட்டங்களில் ஊழல் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளதாக வெங்கடேசன் தெரிவித்தார். 7.50 லட்சம் கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்து விசாரணை நடத்த முடியாத மோடி அரசு அறிக்கை அளித்த அதிகாரிகளை இடம் மாற்றம் செய்துள்ளதாக அவர் சாடினார். ஊடகம், எழுத்தாளர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிரான பல நடவடிக்கைகளை ஒன்றிய பாஜக அரசு எடுத்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் என்.ராம் குற்றம்சாட்டினார்.   இந்துத்துவா, இந்து ராஷ்டிரம் என்பது தான் பாஜகவின் நோக்கம் என்றும் அவர் விமர்சனம் செய்தார். வேளாண்மையில் நெருக்கடி, கிராம புறங்களில் வறுமை என்பது தான் மோடி அரசின் சாதனை என்று பொருளாதார வல்லுநர் ஆத்ரேயா சாடியுள்ளார். கடந்த 9 ஆண்டுகளில் கார்ப்பரேட் ஆட்சியை மோடி நடத்தி வருவதாக அவர் விமர்சனம் செய்தார். அதானிக்கு அனைத்து வகையிலும் மோடி அரசு துணை போவதாக தலைவர்கள் குற்றம் சாட்டினர். அதானி, மோடி உறவு குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை என்றும் அவர்கள் விமர்சனம் செய்தனர்.

Related Articles

Back to top button
Close
Close