fbpx
Others

சிவப்பு நிறக் கொடிநீதியையும் பழிவாங்கலையும் குறிக்கும்…?

சிவப்பு நிறக் கொடி என்பது நீதியையும் பழிவாங்கலையும் குறிக்கும் என்று சொல்லப்படுகிறது. தெஹ்ரானில் நடந்த அமெரிக்க – இஸ்ரேல் கூட்டு வான் வழித் தாக்குதலில் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனை ஈரானும் உறுதிப்படுத்தியுள்ளது.கமேனி படுகொலை செய்யப்பட்டதையடுத்து ஈரான் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. கமேனி கொல்லப்பட்டது இஸ்லாமியர்களுக்கு எதிரான போர் என்று ஈரான் அதிபரும் கூறியுள்ளார். ஈரான் இஸ்லாமியக் குடியரசின் மிக உயர்ந்த அரசியல் தலைவரும், உலகளவில் ஷியா மதத்தின் முக்கிய தலைவருமான ஒருவர் படுகொலை செய்யப்பட்டு இருப்பது என்பது உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிராக, குறிப்பாக ஷியாபிரிவினருக்குஎதிரான,வெளிப்படையானபோர்அறிவிப்பாககருதப்படுகிறது” என்று கூறினார்.இதையடுத்து, அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியுள்ள ஈரான், வளைகுடாவில் அமெரிக்காவின் நேச நாடுகள் மீது இதுவரை இல்லாத அளவிற்கு தாக்குதலை முன்னெடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பும் ஈரானைகடுமையாக எச்சரித்துள்ளார்.கமேனி கொலைக்கு பழிவாங்குவது எங்கள் கடமை என ஈரான் அதிபர் ஆவேசமாக கூறிய நிலையில், தற்போது ஈரானில் இந்த சிவப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்ப்படு வந்த நிலையில் அவர் கொல்லப்பட்டு உள்ளார். அவரை கொல்ல முடிவு செய்த அமெரிக்கா,Iran Red Flag of Revenge Raised at Jamkaran Mosque After Khamenei s Killing இஸ்ரேலின் உதவியுடன் அதை செய்து முடித்து உள்ளது.கமெனியின் இருப்பிடம், அன்றாட நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப் பட்டுள்ளது. இதற்கு இஸ்ரேல் உளவுத்துறை தகவல்களை வழங்கியது. இதன்மூலம் அயதுல்லா அலி கமெனி தனது அலு வலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று இருப்பது தெரியவந்ததும் அந்த கட்டிடம் மீது தாக்கு தல் நடத்தப்பட்டு அவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கமேனி மட்டுமின்றி அவரது மகள், மருமகன் ஆகியோரும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல் நாட்டை அழிக்கும் திட்டத்தை வகுத்தவர் கமேனி. மத்திய கிழக்கு முழுவதும் இஸ்ரேல் எல்லைகள் வரை தன் கரங்களை விரித்த ‘ஈரானிய ஆக்டோபஸின் தலைவன்’ என்றும் அவர் அறியப்பட்டார்” என்று குறிப்பிட்டது.கமேனியின் மரணத்திற்குப் பிறகு, ஈரான் ஒரு புதிய உச்ச தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை நாட்டை நிர்வகிக்கமூன்றுபேர்கொண்டதற்காலிகதலைமைகவுன்சிலைஅமைத்துள்ளது.66வயதுமதகுருஒருவரும்இக்கவுன்சிலில்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அலிரேசா அராஃபி அதன் தற்காலிக தலைமை கவுன்சிலின் நீதி உறுப்பினராக நியமிக்கப்பட்டதாக அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன.

Related Articles

Back to top button
Close
Close