சிவகங்கையில் கம்பி எண்ணும் பஞ்சாயத்து தலைவி நடந்தது என்ன.?
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர், அதே பகுதியில் புதிய வீடு கட்டி உள்ளார்.அவரது தனது புதிய வீட்டிற்கு தீர்வை ரசீது பெற காளையார்கோவில்ஊராட்சிமன்றஅலுவலகத்தில் அனுமதி கோரியுள்ளார். அதற்கு ஊராட்சி மன்ற தலைவி ஜோஸ்மின்மேரி லஞ்சம் கேட்டாராம். இதனிடையே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவி, அவரது கணவர் உள்பட 3 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.லஞ்சம் கொடுக்காமல் அரசு அலுவலகங்களில் பணிகளை முடிக்க வேண்டும் என்று
பலரும்தற்போதுஅதிகமுயற்சிஎடுக்கிறார்கள்.அத்துடன்லஞ்சம்கேட்பவர்களையும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் அளிக்கிறார்கள்.. லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து கைதும் செய்கிறார்கள். கடந்த சில மாதங்களில் மட்டும் ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, திருப்பூர், கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம் என பல மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறிப்பாக சிவகங்கை மாவட்டத்திலும் ராமநாதபுரம் மாவட்டத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிப்பது கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ளது. தற்போது புதிய வீட்டிற்கு தீர்வை ரசீது பெற லஞ்சம் வாங்கிய காளையார்கோவில் ஊராட்சி மன்ற தலைவி கைதாகிஉள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் கிருஷ்ணா நகரை சேர்ந்த 45 வயதாகும் காளீசுவரன், புதிய வீடு கட்டி உள்ளார். இந்த புதிய வீட்டிற்கு தீர்வை ரசீது பெற காளையார்கோவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அனுமதி கோரியிருக்கிறார். அதற்கு ஊராட்சி மன்ற தலைவி ஜோஸ்மின்மேரி, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் சொல்லப்படுகிறது.ஆனால்லஞ்சம்கொடுக்ககாளீசுவரன்கேட்டதாக விரும்பவில்லையாம். மேலும் இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை அவரிடம் கொடுத்து அனுப்பினார்கள். இந்த பணத்தை கொடுப்பதற்காக காளீசுவரன் நேற்று காளையர்கோவில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்றார்.ஆனால் அங்கு ஊராட்சிமன்றதலைவிஜோஸ்பின்மேரி இல்லை. அவர் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருக்கிறார். அவருடைய கணவர் அருள்ராஜ் அலுவலகத்தில் இருந்துள்ளார். அருள்ராஜ் இதுகுறித்து தனது மனைவியிடம் செல்போனில்தொடர்புகொண்டுகேட்டிருக்கிறார் பின்னர் காளீசுவரனிடம் இருந்து ரூ.5 ஆயிரத்தை பெற்றபோது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ஜான் பிரிட்டோ, இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ஜேசுதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமுகமது மற்றும் போலீசார், அருள்ராஜை கையும் களவுமாக கைதுசெய்தனர் அரசு விழாவில் பங்கேற்க சென்ற ஊராட்சி மன்ற தலைவியை ஜோஸ்பின் மேரியையும் வரவழைத்து அவரையும் கைது செய்தார்கள். அதேபோல ஊராட்சி மன்ற அலுவலக தற்காலிக உதவியாளர் குமார் என்பவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர் 3 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நடவடிக்கை காளையர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.