fbpx
Others

சிலம்பம் விரைவில் அடையாளம் தெரியாமல் போய்விடுமோ..?

தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் விளையாட்டு வளர்ச்சி திட்டத்திற்கு ரூபாய் 440 கோடி ஒதுக்கி இருக்கிறது மகிழ்ச்சியான செய்தி ஆனால் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் வளர்ச்சிக்கு எந்த ஒரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை.குறிப்பாகசிலம்பவளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு சிலம்ப வளர்ச்சி வாரியம் என்று ஒன்று அமைத்து அனைத்து ஆசான்களையும் அழைத்து ஒன்றுபடுத்தி ஒரே விளையாட்டுவிதி மூலம் வழி நடத்தினால் இந்திய முழுவதும் மட்டும் அல்ல உலகம் முழுவதும் நமது சிலம்ப விளையாட்டு விரைவாக வளரும் அதற்கான எந்த திட்டமும் இந்த அரசு செய்யவில்லை.எங்கள் கோரிக்கைகளை ஏற்று முதல்வர்கோப்பையில்சிலம்பத்தைசேர்த்தார்கள்.  தரமற்ற முறையிலே நடத்தப்பட்டுதகுதிஇல்லாதவர்கள் எல்லாம் தங்கப்பதக்கம் வென்ற நிகழ்ச்சி அனைத்து ஆசான்களையும் வருத்தப்பட வைத்தது.2019ல் கேலோ இந்தியா விளையாட்டில் மத்தியஅரசுமூலம்சேர்க்கப்பட்ட சிலம்பம் இன்றுவரை போட்டியாக நடத்தப்படவில்லை.ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் நடந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் டெமோ செய்வதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.தொடக்க நாளிலே கூட்டமாக சேர்ந்து சிலம்பத்தை சுற்றி காட்டுவது என்றால் சிலம்ப விளையாட்டு வீரர்கள் போட்டி திறமை எப்படி காட்ட முடியும்.விளையாட்டுத்துறையில் சேர்க்கப்பட்டு 43 ஆண்டுகள் ஆகின்ற ஒரு விளையாட்டு டெமோ செய்ய வேண்டிய அவசியமில்லை நேரடியாக புதுமுக விளையாட்டாகஇதனைசேர்த்துபோட்டிகளிலேவிளையாடவைத்திருக்கலாம்.இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சிலம்பம் விளையாடப்படுகிறது .அத்தனை மாநிலங்களிலும் போட்டி நடத்தி தமிழ்நாட்டிலே கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் அறிமுக விளையாட்டாக. புதுமுக விளையாட்டாக நடத்தி இருக்கலாம். என்ன காரணத்தாலோ அப்படி நடத்தப்படவில்லை.இந்த அரசு சிலம்பத்தை புறக்கணிக்கிறதா? அல்லது விளையாட்டு துறை அதிகாரிகள் புறக்கணிக்கிறார்களா?அனைத்து சிலம்ப ஆசான்களும் மிகுந்த வேதனையோடு இருக்கிறார்கள்.விளையாட்டுத் துறையில் கிடைக்க இருக்கும் சலுகைகள். இட ஒதுக்கீடுஎதுவுமேசிலம்பவிளையாட்டுக்குகிடைப்பதற்குவாய்ப்பேஇல்லை.ஆகவே மிக விரைவாக அரசு நடவடிக்கை எடுத்து சிலம்ப விளையாட்டை முறையாக வளர்ச்சி அடைய செய்ய வேண்டும்.நெற்பயிராக இருக்கும் சிலம்பம் மத்தியிலே களைகளாக ஏராளமான அமைப்புகள் உருவாகி போட்டிகளை நடத்தி பணத்தை வசூல் செய்து கொண்டிருக்கிறது.இவைகளை தடுப்பதற்கு அரசாங்கம் நேரடியாக சிலம்ப வளர்ச்சிக்கு உரிய திட்டங்களை தீட்ட வேண்டும்.இல்லையென்றால் விரைவில் சிலம்பம்அடையாளம்தெரியாமல்போய்விடும்.என்பதைவருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம். என்றுதமிழ்நாடு சிலம்பம் பேரவை கௌரவ தலைவர். சிலம்பச்செம்மல்.கலைமுத்துமணி.ஆர்.முருகக்கனிஆசான்மிகுந்தவேதனை  யோடு தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

Related Articles

Back to top button
Close
Close