சிலம்பத்தில் சாதித்த கோவை சகோதரர்கள்….


தமிழ்நாட்டின்பாரம்பரிய விளையாட்டு சிலம்பத்தில் சாதித்த கோவை சகோதரர்கள் ! வெளிநாட்டு போட்டிகளில் பங்குபெற அரசு உதவிக்காக காத்திருப்பு !
கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்த சகோதரர்கள் மு.வருண் தனியார் கல்லூரியில் ஐ (பி.காம்) படித்து வருகிறார் மற்றும் மு.தருண் அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் தந்தை முத்துராஜ் ஆட்டோ ஓட்டுநர் ஆவார். சகோதரர்கள் இருவரும் சிறுவயதிலிருந்து சிலம்பம் சுற்றுவதில் ஆர்வம் கொண்டவர்கள். கடந்தமாதம் கோவாவில் நடைபெற்ற தேசிய இளையோர் விளையாட்டு போட்டிகள் 2025-இல் சிலம்பம் சுற்றும் போட்டியில் சகோதரர்கள் இருவரும் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இவர்கள் பல தேசிய மற்றும் சர்வதேச அளவில் பங்குபெற்று மொத்தமாக 10 தங்க பதக்கங்களை பெற்றுள்ளனர். இது குறித்து சகோதரர்கள் வருண் மற்றும் தருண் கூறுகையில் எங்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் எங்களை மிகவும் உற்சாகப்படுத்தினார்கள் என்றும் பல கடினமான சூழ்நிலைகளை கடந்து தற்போது இந்த இடத்திற்கு வந்துள்ளதாகவும், மேலும் நாங்கள் வெளிநாடுகளுக்குசென்றுபலவிளையாட்டுபோட்டிகளில்பங்குபெறவிரும்புவதாகவும், நமது தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தில் சாதித்து காட்டி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க முனைவதாகவும், அதற்கான வசதிவாய்ப்புகள் தங்களிடம் இல்லாத்தால், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும்என்றுதெரிவித்தனர்.சகோதரர்களுக்குதமிழகஅரசுசார்பில்உதவிசெய்யவேண்டும்என்றுவிளையாட்டுஆர்வலர்கள்பலர்கோரிக்கைவிடுத்துள்ளனர்.