fbpx
Others

சிபிஐ விசாரணைக்கு மூன்றாவது முறையாகவிஜய்ஆஜர்…

சிபிஐ விசாரணை: விஜய்க்கு பதிலா ஆஜராகப்போவது அவரா?!.. அரசியல் பரபர!...கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து நீதிமன்ற உத்தரவின்பேரில், சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விஜய் இரண்டு முறை ஆஜராகி விளக்கம் அளித்தார். மீண்டும்விசாரணைக்கு ஆஜராகுமாறு மூன்றாவதுமுறையாகஅவருக்குசம்மன்அனுப்பப்பட்டது.இதையடுத்து, சென்னையில் இருந்து தனி விமானத்தில் அவர் கடந்த 14-ம் தேதி டெல்லி புறப்பட்டுச் சென்றார். ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் உடன் சென்றனர். டெல்லியில் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த விஜய், சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஆஜரானார். காலை 11 மணிக்கு அவரிடம் விசாரணை தொடங்கியது.குறிப்பாக, பிரச்சாரத்துக்கு விஜய் தாமதமாக வந்ததுதான் நெரிசலுக்கு காரணமா என்ற கோணத்தில் அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை மீண்டும் எழுப்பினர். அதிகாரிகள் புதிதாக பல்வேறு கேள்விகளையும் எழுப்பினர். அத்துடன், ஏற்கெனவே கேட்ட கேள்விகளை மீண்டும் கேட்டனர். முன்பு அளித்த பதிலைத்தான் விஜய் கூறுகிறாரா, மாற்றிக் கூறுகிறாரா என்பதை பதிவு செய்து கொண்டனர்.மாவட்ட ஆட்சியர், காவல் துறை உயர் அதிகாரிகள் அளித்த பதில்களுக்கும், கட்சி நிர்வாகிகள் அளித்த விளக்கங்களுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை முன்வைத்தும் விஜய்யிடம்அதிகாரிகள் பல கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது. இதற்காக பல முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் அவரிடம் காண்பித்து விளக்கம் பெற்றனர். இந்த விசாரணை 7 மணி நேரம் நீடித்தது. விசாரணை முடிந்து மாலை 6 மணி அளவில் சிபிஐ அலுவலகத்தில் இருந்து விஜய் வெளியே வந்தார்.அலுவலகம் முன்பு குவிந்திருந்த தவெகதொண்டர்கள்,அவர்மீதுமலர்களைத் தூவி வரவேற்பு அளித்தனர். தனது காரின் மேல்பக்கத் திறப்பு வழியாக வெளியே வந்து, தொண்டர்களைப் பார்த்து விஜய் உற்சாகத்துடன் கையசைத்தார். விஜய்யிடம் நடத்தப்பட்ட விசாரணை முடிவடைந்ததை அடுத்து,டெல்லியில்இருந்துஅவர்தனிவிமானத்தில்சென்னைக்கு புறப்பட்டார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு, வேட்பாளர்தேர்வு, அடுத்தகட்ட பிரச்சாரத் திட்டங்கள் குறித்து அவர் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close