fbpx
Others

சின்னஉப்புபேட்டைகிராமத்தில் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி…

விளாபாக்கம் அடுத்த சின்னஉப்புபேட்டை கிராமத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா விளாபாக்கம் அடுத்தசின்ன உப்புபேட்டை கிராமத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் இரண்டு நாள் நிகழ்ச்சியாக மஹா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது முதல் நாளான நேற்று 19.04.25 கணபதி ஹோமம் லட்சுமி ஓமம், நவகிரக ஓமம், கோ பூஜை, தீப ஆராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மாலையில் மங்கல இசை நிகழ்ச்சி நடைபெற்றதுமேலும் ஞாயிற்றுக்கிழமை 20.04.25 இன்று உத்திராடம் நட்சத்திரம் மிதுன லக்னத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து வானவேடிக்கை, மேளதாளம் முழங்க பூ பள்ளக்கில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இவ்விழாவினை அக்கிராமத்தைச் சேர்ந்த விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்தினர்.

Related Articles

Back to top button
Close
Close