fbpx
Others

சிந்து நதியில்,பாகிஸ்தான்சிந்து பாடியது-ஆக்‌ஷனில்இந்தியா

  •  கடந்த 1960 ஆம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது.நதி நீர் பங்கீடு ஆணையத்தின் ஆணையர்கள் வழியாக நேற்று முன் தினம் (ஜனவரி.25) இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.இமய மலைத் தொடரின் கைலாஷ் மலையில் மேற்கு திபெத் பகுதியில் உருவாகும் சிந்து நதி ஆசியாவின் மிக நீண்ட ஆறுகளில் ஒன்றாக உள்ளது.சிந்து ஆறு லடாக் வழியாக பாய்ந்து, காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் வடக்கு பகுதிகள் வழியாக சென்று அரபிக்கடலில் கலக்கிறது.

பாகிஸ்தானின் மிக நீண்ட ஆறாகவும் அந்த நாட்டின் தேசிய நதியாகவும் சிந்து உள்ளது. இந்த சிந்து நதி நீரை பகிர்ந்து கொள்வது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 1960 ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவும் பாகிஸ்தான் அதின்பர் முகம்மது அயூக் கானும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் படி சிந்து ஆறும் அதன் துணை ஆறுகளும் இரு கூறுகளாக பிரிக்கப்பட்டன..சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மூன்றும் மேற்கு பகுதி ஆறுகள் என்றும், பியாஸ், சத்லஜ், ராவி ஆகிய மூன்றும் கிழக்கு பகுதி ஆறுகள் என்று பிரிக்கப்பட்ட்டன. கிழக்கு பகுதி ஆறுகளின் நீரை முழுக்க பயன்படுத்த இந்தியாவுக்கு உரிமை வழங்கப்பட்டது. மேற்கு பகுதி ஆறுகளின் நீரை முழுக்க பயன்படுத்த பாகிஸ்தானுக்கு உரிமை வழங்கப்பட்டது. கிழக்கு பகுதி ஆறுகளின் நீரை இழந்ததற்காக பாகிஸ்தானுக்கு இழப்பீட்டு வழங்கப்பட்டது.

ஆனால் சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தபடி பாகிஸ்தான் நடந்து கொள்ளவில்லை என்பது இந்தியாவுக்கு கடும் அப்செட்டை ஏற்படுத்தியுள்ளது. இதையடுடுத்து, சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் 1960-ஐ மாற்றி அமைக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இது தொடர்பான நோட்டீஸ் சிந்து நதிநீர்ப் பங்கீடு ஆணையத்தின் சம்பந்தப்பட்ட ஆணையர்கள் வழியாக ஜனவரி 25-ம் தேதி வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தின் விதிமீறல்களைச் சரிசெய்வதற்கான பேச்சுவார்த்தைக்கு வர பாகிஸ்தான் அரசுக்கு 90 நாட்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்தில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. சிந்து நதி நீர் ஒப்பந்த ஷரத்துக்களை மீறுவதிலும் அதனை நடைமுறைபடுத்துவதிலும் பாகிஸ்தான் அரசு நடந்து கொள்ளும் விதமே ந்த ஒப்பந்தத்தை மாற்றியமைப்பதற்கான நோட்டீஸை அனுப்பும்படி இந்தியாவுக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியாவின் கிஷங்கங்கா மற்றும் ரடில் நீர்மின் திட்டங்களுக்கான டெக்னிக்க்கல் ஆட்சேபங்களை ஆய்வு நடுநிலையான நிபுணர் ஒருவரை நியமிக்க வேண்டும் என பாகிஸ்தான் கோரியது. ஆனால், மறு ஆண்டே இந்த கோரிக்கையை தன்னிச்சையாக பாகிஸ்தான் திரும்ப பெற்றது. மேலும் ஆட்சேபனை தொடர்பாக நடுவர் நீதிமன்றத்தை நாடியது. பாகிஸ்தானின் இந்த செயல் சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை மீறும் வகையில் இருந்தது.

இதனையடுத்து இந்தியாவும் நடுநிலை நிபுணரை அமைக்க வேண்டும் என தனியாக ஒரு கோரிக்கை முன்வைத்தது. இதையடுத்து இந்த பிரச்சினைகளை தீர்க்க சரியான வழிமுறைகளை கண்டறிய வேண்டும் என்று உலக வங்கி இருநாடுகளையும் கேட்டுக்கொண்டது. இதனால் ஒருங்கிணைந்து தீர்வு காண இந்தியா முயற்சியை எடுத்த போதிலும் பாகிஸ்தான், 2017- 2022 வரையும் இவ்விவகாரம் குறித்து பேச மறுத்தது. பாகிஸ்தானின் தொடர்ச்சியான வற்புறுத்தலை தொடர்ந்து இந்த விவகாரத்தில் சமீபத்தில் நடுநிலையான நிபுணரை நியமித்து ஆய்வு செய்ய உலக வங்கி நடவடிக்கை எடுத்தது. ஆனால், சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்ததின் விதிகளை மீறும் வகையில் பாகிஸ்தான் செயல்பட்டதால் பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் விடுத்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Articles

Back to top button
Close
Close