சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்….?

பழனி அருகே பாலசமுத்திரம் குரும்பபட்டியை சேர்ந்த விவசாயிகள் ஆடு வளர்த்து வருகின்றனர். பெத்தநாயக்கன்பட்டி அருகில் அவர்களது பட்டியில் தெரு நாய்கள் இன்று 15 குட்டிகளைக் கடித்துக் குதறியது.இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கண்ணீருடன் கோரிக்கைமேலும் பழனியில் அனைத்து வார்டுகளிலும் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது நகராட்சி நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழனியில் உள்ள அனைத்து வார்டு மக்களின் கோரிக்கை.ஆட்ட கடிச்சு,மாட்ட கடிச்சு,மனுசனை கடிக்கும்.
என்பது பழமொழி.இதுவும் நடந்து விட்டது. இதற்கு மேல் பெரிய விபத்துக்கள் நடப்பதற்கு முன், நகராட்சி நிர்வாகமும், விலங்குகள் நல அமைப்பும் சேர்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…