fbpx
Others

சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் பாய்ந்தது.பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து ..

 சந்திரயான் 3 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு இஸ்ரோ குழுவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். எல்.வி.எம்.3 எம்-4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்டது.  இன்று ஏவப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலம் ஒரு மாதத்துக்கும் மேலான பயணத்துக்கு பின் நிலவைச் சுற்றி வரும். பூமியில் இருந்து 179 கி.மீ தொலையில் சுற்று வட்டப்பாதையில் சந்திரயான் 3 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது. நிலவைச் சுற்றி வந்த பின் ஆக.23-ம் தேதி நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சந்திரயான் 3 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு இஸ்ரோ குழுவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்..

சந்திராயன் 3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியதன் மூலம் இந்தியா புதிய அத்தியாயம் படைத்துள்ளது. சந்திரயான் 3 வெற்றிகரமாக செலுத்தி இஸ்ரோ வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சந்திரயான் – 3 இந்தியாவின் விண்வெளி ஒடிஸியில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறது; ஒவ்வொரு இந்தியனின் கனவுகளையும் லட்சியங்களையும் உயர்த்தி உயரமாக உயர்கிறது.

சந்திரயானின் வெற்றி நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். தங்களின் ஆன்மாவிற்கும் புத்தி கூர்மைக்கும் தலை வணங்குகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். இதேபோல் சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். விண்வெளி ஆய்வில் மகத்தான மைல்கல்லை சந்திரயான் 3 விண்கலம் எட்டியுள்ளது.சந்திரயான்-3 பயணம் வெற்றியடைய வாழ்த்துவதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு டிவீட் செய்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close