fbpx
Others

 சத்திய சாய் பாபா–கடவுளின் அவதாரம்…..!

   ஸ்ரீ   சத்திய சாய் பாபா அவர்கள், ஒரு இந்திய ஆன்மீக குருவாகப் போற்றப்பட்டவர் ஆவார். இவருடைய ஆன்மீகப் பற்றில் ஈடுபாடு கொண்ட பக்தர்கள் அவரை, கடவுளின் அவதாரமாகவே கருதினர். இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் தன்னுடைய நிறுவனங்களின் மூலம் ஏராளமான இலவசக் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவைகள் புரிந்து வந்தார். இவருடைய பெயரில் சுமார் 1200 க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் உலகம்முழுவதும் செயல்பட்டு வருகின்றது. இந்தியாவின் முன்னணி ஆன்மீகத் தலைவர்களுள் ஒருவராகப் போற்றப்படும் பகவான் சத்திய சாய் பாபா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகப் காண்போம்.  பிறப்பு: நவம்பர் 23, 1926 பிறப்பிடம்: புட்டபர்த்தி (அனந்தபூர் மாவட்டம்), ஆந்திரப்பிரதேசம் மாநிலம், இந்தியா  பணி: ஆன்மீகவாதி, சமூக சேவகர்  இறப்பு: ஏப்ரல் 24, 2011  நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு  சத்திய நாராயண ராயூ என்ற இயற்பெயர்கொண்ட இவர், 1926ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் நாள், இந்தியாவின் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்திலுள்ள “புட்டபர்த்தி” என்ற இடத்தில் பெத்தவெங்கம ராயூ என்பவருக்கும், ஈசுவராம்மாவுக்கும் எட்டாவது குழந்தையாகப் பிறந்தார்.ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்விசத்ய நாராயண விரதம் இருந்து பிறந்ததால், இவருடைய பெற்றோர்கள் இவருக்கு சத்திய நாராயணன் எனப் பெயர் சூட்டினர். புட்டபர்த்தியில் உள்ள ஒரு பள்ளியில் தன்னுடைய ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த அவர், இளம் வயதிலேயே பக்திமார்க்கம் சார்ந்த நாடகம், இசை, நடனம், மற்றும் கதை எழுதுதல் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவராக விளங்கினார்.சாய் பாபா செய்த வியக்கதக்க அற்புதங்கள்   அவர் படிக்கும் பொழுது, தன்னுடைய நண்பர்கள் ஏதாவது கேட்டால் உடனே அதை வரவழைத்து நண்பர்களுக்குக் கொடுப்பார். இதனால் அவரை சுற்றி எப்பொழுதும் நண்பர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். ஒரு நாள் தன்னுடைய வீட்டில் இருந்தவர்கள் முன், கையில் கற்கண்டு வரவழைத்து காண்பித்தார். இதைக் கண்ட அவருடைய தந்தை அவரை கண்டித்தார். ஆனால் அவர் நான்தான் “சாய் பாபா” என்றும், ‘சீரடிசாய் பாபாவின் மறுஜென்மம் நானே!’ என்றும் கூறினார். அவருடைய பேச்சும், செய்த அற்புதங்களும் மக்களிடையே பரவத் தொடங்கியது. அவர் பலரும் வியக்கதக்க வகையில் “விபூதி தருதல், மோதிரங்கள், கடிகாரங்கள், லிங்கம்” போன்றவற்றை வரவழைத்து அற்புதங்கள் நிகழ்த்தியதால், பக்தர்கள் அவரைத் தேடி வர ஆரம்பித்தனர். மேலும், பக்தர்களுக்கு வியக்கதக்க வகையில் விபூதி தருதல், மோதிரங்கள், கடிகாரங்கள், லிங்கம் போன்றவற்றை வரவழைத்துனார்.  சாய் பாபாவின் ஆன்மீகப் பயணம் மற்றும் சமூக சேவைகள்  1940 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், பல்வேறு இடங்களுக்கு சென்ற அவர், தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் வழங்கினார். அவருடைய ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட பக்தர்கள், அவரை ‘கடவுளின் அவதாரம்’ எனக் கருதி, 1944 ஆம் ஆண்டு அவருக்கு கோயில்கள் எழுப்பினர். பின்னர் 1954 ஆம் ஆண்டு, அங்கு ஒரு சிறு மருத்துவமனையைத் தொடங்கி, அங்குள்ள மக்களுக்கு இலவச மருத்துவ வசதி அளித்தார். மேலும், இவருடைய பெயரில் பல தொண்டு நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, இலவசக் கல்வி மற்றும் மருத்துவம், பாடசாலைகள், உயர்கல்வி நிலையங்கள், குடிநீர் வழங்குதல் எனப் பல்வேறு திட்டங்களில் சேவைப் புரிந்து வருகிறது.  இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகில் சுமார் 130க்கும் மேற்பட்ட நாடுகளில் இவருடைய பெயரில் தொண்டு நிறுவனங்கள் நிறுவப்பட்டு, மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சேவைகள் புரிந்து வருகிறது. தூய குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ், இந்தியாவில் பல கிராமங்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க தெலுங்கு-கங்கை திட்டத்தினை சீர் செய்து, மக்களின் தாகத்தினை தீர்த்து வைத்தார். பிறகு 1968 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் நைரோபி, உகாண்டா போன்ற வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். பகவான் சத்யசாய் பாபாவால், 1972, செப்.2ல் சத்யசாய் சென்ட்ரல் டிரஸ்ட் தொடங்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை போதிக்கும் வகையில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஏழை நோயாளிகளுக்கு முதல், இரண்டாம், மூன்றாம் நிலைகளில் இலவச மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், சென்னை நகர மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க வசதி செய்து தரப்பட்டுள்ளது. இது தவிர நாடு முழுவதும் கலாசாரம், பண்பாட்டை வளர்க்கும் விதத்தில் கலைக்கூடங்கள், சமூக சேவை மையங்கள் நிறுவப்பட்டு பாபாவின் போதனைகளைப் பரப்பும் பணி நடக்கிறது. வறுமை ஒழிப்பு, மருத்துவம், கல்விசேவை மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் திட்டங்களையும் இந்த டிரஸ்ட் செயல்படுத்துகிறது.சென்னையின் தாகம் தீர்த்த சத்யசாய் பாபா  சென்னை நகருக்கு குடிநீர் வழங்கவும், ஆந்திராவின் வறட்சி மாவட்டங்களில் விவசாயத்தை பெருக்கும் வகையில் தெலுங்கு கங்கை திட்டம் தீட்டப்பட்டது. இதன்படி, கிருஷ்ணா நதி நீரை கால்வாய் மூலம் மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்ல ஆந்திர அரசு முடிவு செய்தது.கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஸ்ரீசைலம் அணைக்கட்டின் ஒரு பகுதியில் உள்ள போத்திரெட்டுபாடு என்ற இடமும், கடப்பா அருகில் உள்ள சோமசீலா அணையும் பிரமாண்ட கால்வாய் மூலம் இணைக்கப் பட்டன. ஆந்திர மாநிலத்துடன் தமிழக அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆண்டுக்கு 12 டி.எம்.சி., என்ற அளவில் கிருஷ்ணா நீர் பெற முடிவானது.இதற்காக, சோமசீலா அணையில் இருந்து கண்டலேறு அணைக்கு வரும் கிருஷ்ணா நீரை, அங்கிருந்து 164 கி.மீ., தூரத்தில் உள்ள ஊத்துக் கோட்டையில் உள்ள “ஜீரோ பாயின்ட் வரை கால்வாய் அமைத்து கொண்டு வந்து, பின், 17 கி.மீ., தொலைவில் உள்ள பூண்டி ஏரிக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.  கண்டலேறு அணையில் இருந்து ஊத்துக் கோட்டை வரை அமைக்கப்பட்ட கால்வாயின் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால், கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப் பட்ட கிருஷ்ணா நீரில் பல லட்சம் லிட்டர் வீணானது.கிருஷ்ணா நீர் வரும் கால்வாய் பராமரிக்கப் பட்டால் மட்டுமே சென்னைக்கு சீரான குடிநீர் பெற முடியும் என்ற நிலையில், பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் உதவியால், ஸ்ரீசத்ய சாய் அறக்கட்டளை மூலம் கால்வாய் சீரமைப்பு பணி துவக்கப்பட்டது. கண்டலேறு முதல் ஊத்துக்கோட்டை வரையிலான கால்வாயை 200 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன.மண் அரிப்பு காரணமாக நீர் ஒழுக்கு ஏற்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கெல்லாம் கான்கிரீட் பக்கவாட்டு சுவர்களும், அடித்தளமும் அமைக்கப்பட்டது. பாறைகள் உள்ள பகுதிகள் மட்டும் விடப்பட்டன.  ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பிரமாண்டமான இப்பணியை, இரண்டு ஆண்டுகளில் ஸ்ரீ சத்யசாய் அறக்கட்டளை செய்து முடித்தது. இதைத் தொடர்ந்து கடந்த 2006ம் ஆண்டு இறுதி முதல் புதுப்பிக்கப்பட்ட சத்யசாய் கால்வாய் மூலம் சென்னைக்கு கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கிறது.கால்வாய் புனரமைக்காததற்கு முன், கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் கிருஷ்ணா நீர் 10 நாட்கள் பயணம் செய்து ஊத்துக்கோட்டை “ஜீரோ பாயின்ட்டை வந்தடையும். மேலும், நீர் ஒழுக்கு காரணமாக ஆயிரம் கன அடி என்ற அளவில் திறந்துவிடப்படும் நீர், ஊத்துக் கோட்டைக்கு வரும் போது 450 முதல் 500 கன அடியாக குறைந்திருக்கும். ஆனால், சத்ய சாய் அறக்கட்டளை சார்பில் கால்வாய் புதுப்பிக்கப்பட்ட பின், திறந்துவிடப் பட்ட ஐந்து நாட்களில் கிருஷ்ணா நீர் ஊத்துக்கோட்டை வந்துவிடுகிறது. மேலும்,ஆயிரம் கன அடி திறந்துவிடப்பட்டால், 900 கன அடி நீர் வந்து சேர்கிறது       சத்ய சாய்பாபாவின் இந்த     பிரமாண்ட திட்டத்தால், இன்றைக்கு சென்னை நகர மக்கள் தங்கு தடையின்றி குடிநீர் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணா நதி கால்வாய் புனரமைப்பு திட்டத்தின் இரண்டாவது கட்டமாக “ஜீரோ பாயின்ட்டான ஊத்துக்கோட்டையில் இருந்து பூண்டி ஏரி வரையிலான 17 கி.மீ., தூர கால்வாயும் 100 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஊத்துக்கோட்டைக்கு வந்து சேரும் கிருஷ்ணா நீர், தங்கு தடையின்றி அடுத்த சில மணி நேரங்களில் பூண்டி ஏரி வந்தடைகிறது. ஸ்ரீசத்யசாய் கால்வாயின் பயனாக, தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆந்திர அரசு தரும் கிருஷ்ணா நீர் இன்றைக்கு சிந்தாமல், சிதறாமல் சென்னை வந்து சேர்கிறது.சென்னை நகர மக்களின் குடிநீர் பிரச்னையும் முடிவுக்கு வந்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close