fbpx
Others

சத்தியமங்கலத்தில் கால பைரவர் திருவீதி உலா…

சத்தியமங்கலம் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் ஶ்ரீ கால பைரவர் ஜென்மாஷ்டமி விழா நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து வர மிளகாய் வேள்வியும், 108 சங்காபிஷேகமும், பைரவருக்கு மகா அபிஷேகம், தீபா ஆராதணையும் தொடர்ந்து வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இன்று காலை கால பைரவர் உற்சவர் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பக்தர்கள் இழுந்து வர நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நடைபெற்றது. திருவீதி உலா வந்த பைரவருக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close