fbpx
Others

 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி


பீகார், ஹரியானா, மகாராஷ்டிரா, ஒடிஷா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் காலியாக இருந்த சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 3 ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை முடிவில், நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர், 1,794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதே போன்று ஹரியானா மாநிலம், ஆதம்பூர் இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் குலதீப் பிஸ்னோய் 15,740 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைவசப்படுத்தியுள்ளார். .உத்தரப்பிரதேசம் மாநிலம், கோலகோகர்ணா தொகுதியையும் மற்றும் ஒடிஷாவின் தாம்நகர் தொகுதியையும் பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், அந்தேரி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணியைச் சேர்ந்தவர் வெற்றி பெற்றுள்ளார்.
பீகார் மாநிலம், மோகமா தொகுதியில் போட்டியிட்ட ராஷ்ட்ரீய ஜனதா தளம் வேட்பாளர், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தெலுங்கானா மாநிலம், முனுகொடு தொகுதியில் தெலுங்கனா ராஷ்ட்ரீய சமிதி வேட்பாளர் 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close