சட்டசபையில் இருந்து 3 வது முறையாக வெளியேறிய ஆளுநர் ரவி…..
தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. பொதுவாக ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இன்றும் ஆளுநர் உரையாற்ற வந்திருந்தார்.அப்போது அவர் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என கேட்டார். அதற்கு சட்டசபை சபாநாயகரோ , தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதுதான் தமிழக சட்டசபையின் மரபு என மறுத்தார். இதனால் ஆளுநர் ரவி சட்டசபையில் இருந்து வெளியேறிவிட்டார். மேலும் ஆளுநர் வெளியேறியது ஏன் என்பது குறித்து 13 காரணங்களை குறிப்பிட்டு ஆளுநர் மாளிகை ஒரு விளக்கமளித்துள்ளது. அதில் முதல் காரணமாக ஆளுநர் உரையின் போது மைக் ஆஃப் செய்யப்பட்டிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியிருப்பதாவது: ஆளுநர் ரவியின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை. அப்படி செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்தை பாடுவதுதான் சட்டசபையின் மரபு. ஆனால் ஆளுநர் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்கிறார். இதற்கு மறுப்பு சபாநாயகர் அப்பாவு மறுத்துவிட்டார். அவர்தான் அவையை நடத்துபவர், எனவே அப்பாவு மரபை சுட்டிக் காட்டி மறுத்துவிட்டார்.சட்டசபையில் இருந்து ஆளுநர் ரவி வெளியேறிய 10 நிமிடங்களுக்குள் எப்படி ஆளுநர் மாளிகையில் இருந்து விளக்கம் வெளியாகும்? எனவே முன்கூட்டியே அந்த விளக்கத்தை தயாரித்து வைத்துவிட்டனர் என்பது நன்றாக தெரிகிறது. இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.